வாருங்கள், தோட்டம் போடுவோம்

By செய்திப்பிரிவு

மாடித் தோட்டம் போட்டு அசத்திய பிறகு, குடியரசுத் தலைவரை ஜோதிகா சந்திக்கும் காட்சிகளை ‘36 வயதினிலேயே’ திரைப்படத்தில் நம்மில் பலரும் பார்த்திருப்போம். அதைப் பார்த்ததுடன் திருப்தி அடைந்துவிடாமல், ‘நாமும் மாடித் தோட்டம் போடலாமே’ என்ற யோசனை மனதுக்குள் எட்டி பார்த்திருக்கும். வீட்டில் இருக்கும் இடத்தைப் பற்றிய கவலையை ஒதுக்கி வைத்துவிட்டாலும், ‘எப்படித் தோட்டத்தை அமைப்பது?’ என்ற கேள்வி சற்றே மலைப்பை ஏற்படுத்தலாம்.

ஆனால், நேரடியாகக் களத்தில் இறங்கிவிட வேண்டியதுதான். அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, நகர்ப்புறத் தோட்டக் கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ‘நீங்களே செய்து பாருங்கள்’ என்ற செயல்முறை விளக்கக் கையேடு விளக்குகிறது. வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கு அது தரும் எளிய யோசனைகள்:

முதல் கட்டம்

மாடியில் காய்கறிகளைப் பயிரிடுவதற்கான வழிமுறைகள்:

வீட்டுக் காய்கறித் தோட்டத்தை உருவாக்குவதில் பல் வேறு படிநிலைகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:

இடம் தேர்வு செய்தல்:

மாடிப் பகுதியில் அதிகச் சூரியஒளி கிடைக்கும் இடங்கள் மற்றும் அதிகப்படி நீர் எளிதாக வெளியேறுவதற்கான வடிகால் வசதி உள்ள இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

நீர்க்கசிவைத் தடுத்தல்:

தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நீர்க்கசிவைத் தடுப்பதற்கு 4 X 4 சதுர மீட்டரில் பிளாஸ்டிக் விரிப்புகளை விரிக்கவும்.

செடி வளர்ப்புப் பைகள்

இதன் பிறகு செடிகளை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கலாம். செடிகள் வளர்ப்பதற்கான பிளாஸ்டிக் பைகளைத் தயார் செய்வது எப்படி:

- தென்னைநார்க் கழிவு கட்டியுடன் கூடிய பிளாஸ்டிக் பைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

- கத்தரிக்கோல் கொண்டு சீலிடப்பட்ட பகுதியைக் கத்தரித்துப் பிரிக்க வேண்டும்.

- தென்னைநார்க் கழிவுக் கட்டிகளுடன் தேவையான அளவு தண்ணீரைச் சேர்க்க வேண்டும்.

- ஐந்து முதல் பத்து நிமிடங் களுக்குக் காத்திருக்க வேண்டும்.

- தற்போது தென்னைநார்க் கழிவு நான்கு முதல் ஐந்து மடங்காக உப்பி அதிகரிக்கும்.

- அதிகப்படியான நீர் வெளியேறிச் செடிகள் அழுகாமல் இருக்கப் பையின் பக்கவாட்டில் நான்கு துளைகளை இடவேண்டும்.

- நுண்ணுயிர் உரங்களை (அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா) மற்றும் நுண்ணுயிர் பூஞ்சானக் கொல்லிகளை (சூடோமோனாஸ் மற்றும் டிரைகோடெர்மா விரிடி) ஒரு கிலோ தொழு உரத்துடன் கலந்து, அதைப் பின்னர் தென்னைநார்க் கழிவுடன் நன்கு கலக்க வேண்டும். அரசு தோட்டக் கலை பண்ணை மற்றும் தனியார் நாற்றங்கால்களில் தொழு உரம் கிடைக்கும்.

- நுண்ணுயிர் உரங்களை (அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா) மற்றும் நுண்ணுயிர் பூஞ்சானக் கொல்லிகளை (சூடோமோனாஸ் மற்றும் டிரைகோடெர்மா விரிடி) ஒரு கிலோ தொழு உரத்துடன் கலந்து, அதைப் பின்னர் தென்னைநார்க் கழிவுடன் நன்கு கலக்க வேண்டும். அரசு தோட்டக் கலை பண்ணை மற்றும் தனியார் நாற்றங்கால்களில் தொழு உரம் கிடைக்கும்.

காத்திருப்பு

செடிகள் வளர்ப்பதற்கான பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.

தென்னைநார்க் கழிவுகள் நன்கு மக்குவதற்காக, பைகளை ஏழு முதல் எட்டு நாட்களுக்கு அப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு தென்னைநார்க் கழிவு கருப்பு நிறமாக மாறிவிடும். அப்போதுதான் பைகள், விதைப்பதற்கு ஏற்றதாக மாறும்.

செடிகளை வளர்க்கும் காலம்:

காய்கறிச் செடிகளை எல்லாக் காலங்களிலும் பயிர் செய்யலாம். ஆனால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இந்த இரண்டு மாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

விதைப்பு முறை

நேரடி விதைப்புமுறை: வெண்டை, கொத்தவரை, செடி அவரை மற்றும் முள்ளங்கி விதைகளை நேரடியாக விதைக்க வேண்டும். விதையின் அளவைவிட இரண்டரை மடங்கு அதிக ஆழத்தில் விதைத்த பிறகு, மண்ணால் மூடிவிடவேண்டும்.

நேரடி விதைப்புமுறை: வெண்டை, கொத்தவரை, செடி அவரை மற்றும் முள்ளங்கி விதைகளை நேரடியாக விதைக்க வேண்டும். விதையின் அளவைவிட இரண்டரை மடங்கு அதிக ஆழத்தில் விதைத்த பிறகு, மண்ணால் மூடிவிடவேண்டும்.

கீரை வகைகளின் விதைகள் அளவில் மிகச் சிறியதாக இருப்பதால், ஒரு தேக்கரண்டி விதையுடன் இரண்டு பங்கு மணல் அல்லது நுண்ணுயிர் உரத்தைக் கலந்து தெளிக்க வேண்டும். பிறகு அதைச் செய்தித்தாளால் மூடிவிட வேண்டும். அதன் மேல் பூவாளியைக் கொண்டு நீர் ஊற்ற வேண்டும். விதைகள் நன்கு முளைத்த பிறகு தாளை எடுத்துவிட வேண்டும்.

நாற்றுவிட்டு நடவு செய்யும் முறை: நாற்றுவிட்டு நடவு செய்து பயிரிடும் காய்கறிகளான தக்காளி, கத்தரி, மிளகாய் ஆகியவற்றைக் குழித்தட்டில் ஒரு குழிக்கு ஒரு விதை வீதம் விதைக்க வேண்டும். நாற்றின் வயது 30-35 நாட்கள் ஆன பிறகு செடிகளை வளர்ப்பதற்கான பையில் நடவேண்டும். அதுவரை பையில் கீரை விதைகளை விதைத்துப் பயன் பெறலாம்.

குழித்தட்டு நாற்றங்கால் அமைத்தல்: காய்கறி விதைகளின் நாற்றுகளைத் தயார் செய்யக் குழித்தட்டுக்களும் பயன்படுத்தப்படுவது உண்டு. இதன் குழிகள் 2-3 அங்குலம் ஆழம் கொண்டவை. மேலும், வேர்கள் அழுகாமல் அதிகப்படியான நீர் வெளியேறுவதற்கு ஒவ்வொரு குழியிலும் ஒரு துளை உள்ளது.

முதலில் தென்னைநார் கழிவைக் கொண்டு இதை நிரப்ப வேண்டும். ஒவ்வொரு குழியிலும் ஒரு விதை வீதம் விதைத்த பிறகு நுண்ணுயிர் உரம் அல்லது மணலுடன் நுண்ணுயிர் உரம் சேர்த்த கலவையைக் கொண்டு மூட வேண்டும். அதன்பிறகு, பிளாஸ்டிக் விரிப்பை எடுத்தவுடன் சூரியஒளி படுமாறு குழித்தட்டை வெய்யிலில் வைக்க வேண்டும். பிற்பகலில் நிழல் இருக்கக்கூடிய இடத்துக்கு மாற்ற வேண்டும். நாற்றுகள் அனைத்தும் ஒரு மாத காலத்தில் நடுவதற்கு ஏற்றதாக மாறிவிடும்.

முதலில் தென்னைநார் கழிவைக் கொண்டு இதை நிரப்ப வேண்டும். ஒவ்வொரு குழியிலும் ஒரு விதை வீதம் விதைத்த பிறகு நுண்ணுயிர் உரம் அல்லது மணலுடன் நுண்ணுயிர் உரம் சேர்த்த கலவையைக் கொண்டு மூட வேண்டும். அதன்பிறகு, பிளாஸ்டிக் விரிப்பை எடுத்தவுடன் சூரியஒளி படுமாறு குழித்தட்டை வெய்யிலில் வைக்க வேண்டும். பிற்பகலில் நிழல் இருக்கக்கூடிய இடத்துக்கு மாற்ற வேண்டும். நாற்றுகள் அனைத்தும் ஒரு மாத காலத்தில் நடுவதற்கு ஏற்றதாக மாறிவிடும்.

நீர் ஊற்றுதல்

செடிகளை வளர்ப்பதற்கு ஏற்ற பைகளில் செடிகளை வளர்க்கும்போது, மிகவும் கவனம் தேவை. தென்னைநார்க் கழிவு ஊடகம், செடிகள், பருவநிலை, பைகளின் அளவு, செடியின் வளர்ச்சி ஆகியவற்றை மனதில் கொண்டு, அதற்கேற்றவாறு நீரை ஊற்ற வேண்டும். கோடைக் காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை நீரூற்ற வேண்டும். தென்னைநார்க் கழிவைப் பயன்படுத்துவதால் (அது இயற்கையாகவே தண்ணீரைத் தக்கவைக்கும் தன்மை கொண்டிருப்பதால்) பொதுவாக ஒருமுறையும் கோடைக் காலத்தில் இரண்டு முறையும் செடிகளுக்கு நீரூற்ற வேண்டும்.

அதிகப்படியாக நீரை ஊற்றினால் சத்துகளை வெளியேற்றிப் பூஞ்சானங்களின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தப்படும். செடிகளுக்குத் தண்ணீர் தேவைப்படுகிறதா என்பதை ஒரு குச்சியை எடுத்து ஊடகத்தினுள் செருகிப் பார்க்க வேண்டும். அப்போது குச்சியில் துகள்கள் ஒட்டிக்கொண்டால் தண்ணீர் ஊற்ற அவசியமில்லை.

உரமிடுதல்

கொள்கலன்களில் வளர்க்கும் செடிகளுக்கு வாரத்துக்கு ஒருமுறை உரமிட்டால், அவற்றின் வேர்கள் நன்றாக வளரும். இயற்கை முறையில் உள்ள உரங்கள் தவிர நீரில் எளிதில் கரையக்கூடிய செயற்கை உரங்களை ஒரு தேக்கரண்டி வீதம் இளம் பருவத்திலும், இரண்டு தேக்கரண்டி வீதம் பூக்கள் பூக்கும் தருணத்திலும், பழங்கள் பெருக்கம் அடையும் நேரத்தில், தென்னைநார்க் கழிவு கலவைமீதும் போட வேண்டும். பிறகு பூவாளியால் தண்ணீர் ஊற்ற வேண்டும். நீரில் கரையக்கூடிய உரங்கள் மிகத் துரிதமாகவும், எளிதாகவும் வேர்ப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால், செடிகள் நன்கு செழிப்பாக இருக்கும்.

அறுவடை செய்தல்

நாம் உண்பதற்கு ஏற்றவாறு உள்ள நிலையை அடையும்போது காய்கறிகளை அறுவடை செய்ய வேண்டும். உதாரணமாகத் தக்காளியை நன்கு பழுத்த நிலையிலும், கிழங்கு வகைகளை நன்கு முதிர்ச்சி அடைந்த பிறகும், கீரைகளை இளம் தளிராக இருக்கும்போதும், செடி அவரை/ வெண்டை/ கொத்தவரை/ கத்தரி போன்றவற்றை இளம்பிஞ்சுகளாக இருக்கும்போதும் பறிக்க வேண்டும். அப்போதுதான் காய்கறியின் சத்துகளும் மணமும் மாறாமல் பசுமையாக இருக்கும்.

அறுவடைக்குப் பின்...

அறுவடை முடிந்த பின் செடிகளை வளர்ப்பதற்காகப் பயன்படுத்திய பைகளில் உள்ள ஊடகத்தை ஒரு இடத்தில் ஒன்று சேர்த்துக் கட்டிகள் எதுவும் இல்லாதவாறு உடைத்த பிறகு, நன்கு கிளற வேண்டும். இத்துடன் 20 கிலோ தென்னைநார்க் கழிவு மற்றும் 10 கிலோ மக்கிய உரம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறிய பிறகு, பிளாஸ்டிக் பைகளில் நிரப்ப வேண்டும். பிறகு மீண்டும், பழைய நடைமுறையைப் பின்பற்றிப் புதிய நாற்றுகளை வளர்க்க ஆரம்பிக்கலாம்.

ஒரே மாதிரியான காய்கறியைப் பயிரிடுவதால், செடிகள் வளர்ப்பதற்கான ஊடகத்தில் சத்துகள் அனைத்தும் போய்விடும். மேலும், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைத் தவிர்ப்பதற்காகப் பயிர் சுழற்சி முறையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

28 mins ago

சுற்றுலா

50 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்