முள்ளம்பன்றிகளை விலங்குக் காட்சி யகங்களில் பார்த்திருப்போம். அதைவிடச் சிறிதான முள் போர்த்திய உடலைக் கொண்ட முள்ளெலிகளைப் பற்றி பரவலாக அறியப்படவில்லை. ஆபத்து வந்தால் பந்துபோல் உடலைச் சுருட்டிக்கொள்ளும் முள்ளெலிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்றன.
காடுகள், புதர்கள் அழிக்கப்பட்டதாலும், நாட்டுமருந்து சார்ந்த தவறான நம்பிக்கைகளாலும், இரவில் சாலைகளைக் கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டும் இவை பலியாகின்றன. சிறிதாக இருந்தாலும் உயிர்ப்பன்மையின் முக்கியக் கண்ணி யாகவும், பூச்சிகள்-சிற்றுயிர்களைச் சாப்பிட்டு சூழலியல் சேவைகளும் புரியும் முள்ளெலிகள் பற்றி அறியத்தருகிறது கோவை சதாசிவம் எழுதியுள்ள இந்த நூல். தமிழ்நாட்டில் அதிகம் வாழ்ந்துவரும் முள்ளெலி வகை சென்னை முள்ளெலி.
நம்மிடையே வாழும் இந்தப் பாலூட்டியைக் குறித்த அடிப்படைத் தகவல்களை எளிமையான மொழிநடையில் அறியத் தந்திருக்கிறார் கோவை சதாசிவம். - நேயா
முள்ளெலிகள்: உள்ளே...வெளியே...,
கோவை சதாசிவம்,
குறிஞ்சி பதிப்பகம்,
தொடர்புக்கு: 99650 75221
அனைவருக்கும் பயனளிக்கும்! - ‘உயிர் மூச்சு' சிறப்புப் பக்கத்தில் ‘ஆயிரம் மலர்களே, மலருங்கள்' தொடரைப் படித்துவருகிறேன். ஏழிலைப் பாலை, வெப்பாலை மரங்கள் குறித்து நன்றாக விளக்கி, படங்களையும் வெளியிட்டி ருந்தீர்கள். தஞ்சை பாபநாசம் அருகே உள்ள திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயிலில் வெப்பாலை மரம் தல மரமாக இருக்கிறது. சென்னை திருநீர்மலையில் மலைக்கு ஏறும் படிகளின் இரண்டு புறங்களிலும் காடுபோல் வெப்பாலை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம், கோகர் ணேஸ்வரர் கோயில் சுனை அருகிலும் வெப்பாலையைப் பார்த்திருக்கிறேன். முன்னதாகச் சரக்கொன்றை, பூமருது ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தி இருந்தீர்கள். தாவரவியல் ஆய்வாளர் களுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்குமே இவை பயனளிக்கும். - எஸ்.என்.குசலவன், தாவரவியல் ஆசிரியர், தஞ்சாவூர்.