நம் அருகே இருக்கும் இயற்கைத் தலங்கள்

By த.ஜான்சி பால்ராஜ்

சுற்றுலா என்றவுடன் நாம் வசிக்கும் இடத்தைவிட்டு வெகு தொலைவில் அமைந்திருக்கும் சுற்றுலா இடங்களுக்குச் செல்வதும், அப்பகுதியைக் கண்டுகளித்துத் திரும்புவதும்தான் என்கிற பொதுவான எண்ணம் பெரும்பாலோருக்கு இருக்கிறது. ஆனால், எத்தனை பேர் நாம் வாழும் இடங்களுக்கு மிக அருகில் உள்ள அல்லது நம்மைச் சுற்றியுள்ள இடங்களை முழுமையாகக் கண்டு ரசித்து வியந்திருக்கிறோம்?! சமவெளியில் உள்ளவர்கள் மலைப்பாங்கான இடங்களைக் காண விரும்பிச் செல்வதும், அங்குள்ளவர்கள் சமவெளியின் கடலையும் அலைகளையும் கண்டு மலைப்பதும் இயல்பாக இருக்கிறது. ஆனால், இதெல்லாம் இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்கிற கதைதான். தொலைவைக் கடந்துசெல்லுதல் என்பதில் உள்ள கடினங்கள் வாழ்க்கையில் புதிய பகுதிகளைச் சென்று காணவேண்டும் என்கிற கனவைப் பலருக்கும் பொய்த்துப்போக வைத்துவிடுகிறது. அதிகத் தொலைவும் அதைக் கடந்து சென்று வருவதற்கான செலவினங்களும் மனத்தின் ஆசைகளுக்கு வேலியமைத்துவிடுகின்றன.

உயிர்பெறும் நீர்நிலைகள்: முதலில் நாம் வாழ்கின்ற இடத்தில் உள்ள இயற்கையை விரும்பவும் நேசிக்கவும் பழகிக்கொள்வதே அறிவார்ந்த தன்மை. என்றைக்குமே நாம் வாழும் பகுதிகள்தாம் நமக்கு நிரந்தரமானவை. தொலைதூர இடங்களை விட்டுத் திரும்பும்போது வெறும் நினைவுகளை மட்டுமே நாம் கொண்டுவந்தாக வேண்டும். அதே நேரம் நாம் வாழும் இடங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளை முழுமையாக அனுபவித்துக் காண முடியும். அவற்றை ஆழமாக ரசித்து உணர முடியும். தற்சமயம் மழைக்காலத்தில் ஏரிகளும் குளங்களும் நீர் நிரம்பி வருகின்றன. மரஞ்செடி கொடிகளெல்லாம் பசுமையுடுத்தி அழகாகக் காட்சியளிக்கின்றன. குளிர்ந்த தட்பவெப்ப நிலை மனத்திற்கும் இதமளிக்கிறது. இச்சூழலில் நாம் வாழும் இடங்களுக்கு அருகிலுள்ள ஏரிகள், குளங்கள், வயற்காடுகள், தோட்டங்கள், கிணறுகள்... என்று எத்தனையெத்தனை இயற்கை எழில் மிகுந்த பகுதிகள் பரந்து விரிந்து புவியைச் செழுமைப்படுத்திக் கொண்டிருக் கின்றன! ஆனால், அவையெல்லாம் நமது கண்ணெதிரே கண்டுகொள்ளப்படாமல் ரசிக்க ஆளில்லாமல் கிடக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

8 hours ago

சினிமா

1 hour ago

இலக்கியம்

8 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்