டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 32

By செய்திப்பிரிவு

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த திங்கள்கிழமை (ஜூலை 11) அன்று பகுதி - 31இல் ‘நமது இந்தியா – 9 (வரலாறு – இ)’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று ‘கணிதம் - 4’ என்னும் தலைப்பின்கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.

கணிதம் - 4

1. ஒரு எண்ணிலிருந்து 3 ஐக் கழிக்க அவ்வெண் 18, 24 மற்றும் 32 ஆகிய எண்களால் மீதியின்றி வகுபடும் எனில் அவ்வெண் எது?

அ) 291 ஆ) 288 இ) 285 ஈ) 297

2. ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 4 ஆண்டுகளில் ₹2,000 என்பது ₹2,960 ஆகிறது எனில் 4% வட்டி வீதம் அதிகரித்தால் தற்போதைய கூடுதல் மதிப்பு யாது?

அ. ரூ.3280 ஆ. ரூ.3200 இ. ரூ.3300 ஈ. ரூ.3320

3. ஒரு முக்கோணத்தின் பக்கங்களின் விகிதம் 1/2 : 1/3 : 1/4 . மேலும் சுற்றளவு 169செ.மீ. எனில் மிகச் சிறிய பக்கத்தின் அளவு என்ன?
அ) 78செ.மீ. ஆ) 52செ.மீ.
இ) 65செ.மீ. ஈ) 39 செ.மீ

4. ஒரு வட்டத்தின் விட்டம் 21செ.மீ. எனில் அந்த வட்டத்தின் சுற்றளவு என்ன?

அ) 44செ.மீ. ஆ) 132செ.மீ இ) 84செ.மீ ஈ) 66செ.மீ.

5. ரூ.5,000க்கு 5வருடங்களுக்கு ஆண்டு வட்டி 5% வீதத்தில் தனிவட்டி என்ன?

அ) ரூ.1,000 ஆ) ரூ.2,500 இ) ரூ.1,250 ஈ) ரூ.2,000

6. A இன் வருமானம் B இன் வருமானத்தைவிட 50% குறைவு எனில் B இன் வருமானம் A இன் வருமானத்தைவிட எவ்வளவு சதவீதம் அதிகம்?

அ) 50 ஆ) 100 இ) 200 ஈ) 150

7. ரூ.10,000க்கு வருடத்திற்கு 10% கூட்டு வட்டி வீதத்தில் 3 வருடங்களுக்குக் கூட்டு வட்டி என்ன?

அ) ரூ.3,300 ஆ) ரூ.3,000 இ) ரூ.3,310 ஈ) ரூ.3,400

8. ஒரு பொருளின் அடக்க விலை ₹2,000. 40% லாபத்தில் அப்பொருளை விற்றால் விற்பனை விலை என்ன?

அ) ரூ.2,400 ஆ) ரூ.2,800
இ) ரூ.2,600 ஈ) எதுவுமில்லை

9. a : b = 2 : 3, b : c = 4 : 5 எனில்
c : a இன் விகிதம் என்ன?
அ) 15 : 8 ஆ) 8 : 15
இ) 3 : 5 ஈ) 5 : 3

10. a : b = 2 : 3 , b : c = 6 : 5 மற்றும் a + b + c = 30 எனில் 2a + 3b + 4c இன் மதிப்பு என்ன?

அ) 138 ஆ) 46
இ) 92 ஈ) எதுவுமில்லை

11. A மற்றும் B ஆகியோரின் தற்போதைய வயதுகளின் விகிதம் 4 : 5. 5 வருடங்களுக்குப் பிறகு அவர்களின் வயதுகளின் விகிதம் 5 : 6 எனில் தற்போது அவ்விருவரின் வயதுகளின் கூடுதல் யாது?
அ) 65 ஆ) 45
இ) 60 ஈ) 50

12. 0.015625 இன் கனமூலம் என்ன?

அ) 0.15 ஆ) 0.25 இ) 1.5 ஈ) 2.5

13. 10 சதுரங்களின் பக்கங்கள் முறையே 11செ.மீ, 12செ.மீ,........20செ.மீ எனில் அச்சதுரங்களின் பரப்புக்களின் கூட்டு அளவு என்ன?

அ) 2870 ச.செ.மீ ஆ) 2485 ச.செ.மீ இ) 1485 ச.செ.மீ ஈ) 2500ச.செ.மீ

14. 6 வருடங்களில் ஒரு அசல் ரூ.8,880 ஆகவும், 4 வருடங்களில் ரூ.7,920 ஆகவும் ஒரே தனிவட்டி வீதத்தில் கூடுதலாகிறது எனில் அசல் யாது?
அ) ரூ.6,400 ஆ) ரூ.6,960 இ). ரூ.6,480 ஈ) ரூ.6,000

15. 50கிராம் என்பது ஒரு கிலோகிராமில் எத்தனை சதவீதம்?
அ) 10% ஆ) 50% இ) 5% ஈ) 0.50%

16. ஒருவரின் வருமானம் ரூ.12,000. அவர் ரூ.1,200 சேமிக்கிறார் எனில் அவரது செலவு சதவீதம் என்ன?

அ) 10 ஆ) 90
இ) 80 ஈ) 75

17.ஆறு மணிகள் ஒவ்வொன்றும் முறையே 2, 4, 6, 8, 10, 12 நிமிடங்கள் இடைவெளியில் ஒலிக்கின்றன. பகல் 10 மணிக்கு அனைத்து மணிகளும் ஒலிக்கின்றன எனில் மீண்டும் ஆறு மணிகளும் சேர்ந்து எப்போது ஒலிக்கும்?

அ) பகல் 12 மணி
ஆ) மதியம் 2 மணி
இ) மாலை 4 மணி
ஈ) இரவு 8மணி

18. 43, 91 மற்றும் 183 ஆகிய எண்களை எந்த மீப்பெரு எண்ணால் வகுத்தால் ஒரே மீதியை அளிக்கும்?
அ) 6 ஆ) 8 இ) 3 ஈ) 4

19. ஒரு நாளில் ஒரு கடிகாரத்தின் நிமிட முள்ளுக்கும் மணி முள்ளுக்கும் இடைப்பட்ட கோணம் 180° ஆக (ஒன்றுக்கொன்று எதிராக) எத்தனை முறைகள் இருக்கும்?
அ) 24 ஆ) 22 இ) 44 ஈ) 48

20. இரண்டு பகடைகளை உருட்டும்போது 9 வருவதற்கான நிகழ்தகவு யாது?

அ) 1/12 ஆ) 1/6
இ) 1/9 ஈ) 1/4

பகுதி 31 இல் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள்:

1. இ. 1905

2. அ. ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

3. ஈ. அன்னி பெசன்ட் -
பகுஜன் சமாஜ்
(பிரம்ம ஞான சபை)

4. இ. சரோஜினி நாயுடு (கவிக்குயில்)

5. ஆ. சுதேசமித்திரன்

6. ஆ. கொல்கத்தா

7. ஈ. வினோபா பாவே - வந்தே மாதரம் (தனிநபர் சத்யாகிரகம்)

8. இ. A - 2, B - 1, C - 4, D - 3

9. ஈ. சுதந்திரம் எனது பிறப்புரிமை - லாலா லஜபதிராய்
(திலகர்)

10. ஆ. இரண்டாம் பகதூர் ஷா

11. அ. நவசக்தி

12. இ. கி.பி. 1932

13. ஆ. சூரத் பிளவு - 1909 (1907)

14. ஈ. ரிப்பன் பிரபு

15. ஆ. சர் அயர் கூட்

16. அ. மதன் மோகன் மாளவியா
(1916)

17. இ. பாகிஸ்தான் என்று பெயர் வைத்தவர்
- முகமது அலி ஜின்னா
(முகமது இக்பால்)

18. ஆ. பெங்கால் கெசட்

19. இ. 1916

20. ஈ. சர் சையது அகமது கான்
(1875 இல் முகமது ஆங்கிலோ ஒரியன்டல் கல்லூரி. பின்னர் 1920 இல் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம்)

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்