டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 25

By செய்திப்பிரிவு

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 24) அன்று பகுதி - 24இல் ‘பொது-5 (மனித உடற்கூறியல்)’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று ‘நமது இந்தியா - 8 (வரலாறு - ஆ)’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன

‘நமது இந்தியா - 8 (வரலாறு - ஆ)’

1. டெல்லி அரியணையில் ஆட்சி புரிந்த அடிமை வம்ச அரசர்களை வரிசைப்படுத்துக:
A. குத்புதீன் அய்பெக்
B. சுல்தானா ரசியா
C. பால்பன்
D. இல்டுமிஷ்
அ. A B C D ஆ. A D B C
இ. A D C B ஈ. A B D C

2. முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஔரங்கசீப் ஏன் காரணமாகிறார்?
அ. விரிந்த பேரரசு
ஆ. சத்ரபதி சிவாஜியின் தொல்லைகள்
இ. இந்துக்களின் மீது காட்டிய வெறுப்பு
ஈ. திறமையற்ற நிர்வாகம்

3. அக்பர் நாமா என்கிற நூலை எழுதிய அறிஞர் யார்?
அ. அமீர் குஸ்ரு
ஆ. குல்பதான் பேகம்
இ. பீர்பால்
ஈ. அபுல் பாசல்

4. நிலங்களை சர்வே செய்வதில் சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய சீரான அளவு அலகு எது?
அ. ஜாரிப் ஆ. கதி
இ. காஜ் ஈ. தேஷ்முகி

5. ஹூமாயூன் நாமா என்ற நூலை எழுதியவர் யார்?
அ. ஹூமாயூன்
ஆ. குல்பதான் பேகம்
இ. அபுல் பாசல்
ஈ. அப்துல் காதர் பதாமி

6. அஷ்டப்பிரதான் என்பது யாருடைய அரசவையின் பெயர்?
அ. கிருஷ்ணதேவராயர்
ஆ. மகேந்திர வர்மன்
இ. சத்ரபதி சிவாஜி
ஈ. ஷெர்ஷா சூரி

7. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?
அ. கி.பி. 1784இல் நடைபெற்ற இரண்டாம் மைசூர் போர் இருதரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி முடிந்தது.
ஆ. நான்காம் மைசூர் போரில் திப்பு சுல்தான் தோல்வி.
இ. அக்பர் மூன்றாவது பானிபட் போருடன் தொடர்புடையவர்.
ஈ. தீன் இலாஹி என்கிற புதிய மதத்தை அக்பர் உருவாக்கினார்.

8. தோல் நாணயங்களை வெளியிட்ட முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து எந்த நகருக்கு மாற்றினார்?
அ. கன்னோசி
ஆ. தேவகிரி
இ. ஆக்ரா
ஈ. அலகாபாத்

9. சந்தை ஒழுங்கு விற்பனை முறைகளை அமுல்படுத்திய மன்னர் யார்?
அ. அக்பர்
ஆ. முகமது பின் துக்ளக்
இ ஃபிரோஸ் ஷா துக்ளக்
ஈ. அலாவுதீன் கில்ஜி

10. டெல்லி சுல்தான்கள் ஆட்சிக்கு அடிகோலியவர் என யார் கருதப்படுகிறார்?
அ. முகமது கோரி
ஆ. கஜினி முகமது
இ. குத்புதீன் அய்பெக்
ஈ. பால்பன்

11. ஶ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை செய்துகொண்ட வருடம் எது?
அ. கி.பி. 1772 ஆ. கி. பி. 1784
இ. கி.பி. 1792 ஈ. கி.பி. 1798

12. குதுப்மினார் யாரால் கட்டி முடிக்கப்பட்டது?
அ. குத்புதீன் அய்பெக்
ஆ. இல்டுமிஷ்
இ. பால்பன்
ஈ. ரசியா சுல்தானா

13. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்திய முகலாய மன்னர் யார்?
அ. பாபர் ஆ. ஷாஜஹான்
இ. அக்பர் ஈ. ஔரங்கசீப்

14. முதலாம் சீக்கிய குருவின் பெயர் என்ன?
அ. குரு ராம்தாஸ்
ஆ. குரு கோவிந்த சிங்
இ. குரு அர்ஜூன் தேவ்
ஈ. குருநானக்

15. கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்க:
அ. சிவாஜி - ஜீஜா பாய்
ஆ. ரசியா பேகம் - முதல் பெண்ணரசி
இ. பைராம்கான் - அக்பரின் பாதுகாவலர்
ஈ. மும்தாஜ் - ஜஹாங்கீர்

16. கீழ்க்கண்ட வம்சங்களை வரிசைப்படுத்துக:
1.கில்ஜி 2.சையது
3.லோடி 4. துக்ளக்
அ. 1 2 3 4 ஆ. 2 1 4 3
ஆ. 1 2 4 3 ஈ. 2 1 3 4

17. பொருத்துக :
A. ஜஸியா - 1. முஸ்லிம்கள் வசூலித்த நிலவரி
B. ஜகாத் - 2. முஸ்லிம்கள் வசூலித்த சொத்து வரி
C. உஷர் - 3. முஸ்லிம்கள் அல்லாதவர்களிடம் வசூலித்த நிலவரி
D. க்ராஜ் - 4. முஸ்லிம்கள் அல்லாதவர்களிடம் வசூலித்த தேர்தல் வரி

அ. A - 3 B - 4 C - 2 D - 1
ஆ. A - 4 B - 3 C - 2 D - 1
இ. A - 3 B - 2 C - 4 D - 1
ஈ. A - 3 B - 4 C - 1 D - 2

18. வாஸ்கோடகாமா இந்தியாவில் எங்கு தரை இறங்கினார்?
அ. தரங்கம்பாடி
ஆ. பாண்டிச்சேரி
இ. கோழிக்கோடு
ஈ. மங்களூரு

19. உயிர் வாழும் புனிதர் என அழைக்கப்பட்ட முகலாயப் பேரரசர் யார்?
அ. அக்பர் ஆ. ஜஹாங்கீர்
இ. ஷாஜஹான் ஈ. ஔரங்கசீப்

20. ஔரங்கசீப்பால் கொல்லப்பட்ட சீக்கிய மதகுருவின் பெயர் என்ன?
அ. குரு கோவிந்த சிங்
ஆ. குரு தேஜ் பகதூர்
இ. குரு கோவிந்த சிங்
ஈ. குரு அர்ஜூன் தேவ்

பகுதி 24இல் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள்

1. இ. A-2 B-1 C-4 D-3

2. அ. சேங்கர் (1954)

3. ஆ. அயோடின்

4. ஈ. அடிசன்

5. இ. கரப்பான்பூச்சி

6. ஈ. பிட்யூட்டரி

7. ஆ. கால்சியம்

8. அ. A-3 B-4 C-1 D-2

9. ஆ. தொழுநோய்

10. இ. புரதங்கள்

11. ஆ. 3 1 2

12. அ. 5 - 7

13. ஈ. கைனகாலஜி

14. இ. ராம்தேவ் மிஸ்ரா

15. ஆ. கிரேக்கம்

16. ஆ. ரத்த அழுத்தம்

17. இ. இன்தோவான்

18. அ. ஹெமட்டாலஜி

19. இ. 45

20. ஆ. 24

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 mins ago

இந்தியா

29 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

மேலும்