‘Meager’, ‘meagre’ இரண்டில் எது சரி? - ‘Meagre’ என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவம். என்றாலும் இதை ‘meager’ என்று எழுதுவது ஷேக்ஸ்பியர் காலத்திலேயே இருந்திருக்கிறது. ‘Meagre' என்றால் மிகக் குறைவான அல்லது அற்பமான என்று பொருள். ‘Meagre salary’ என்றால் மிகக் குறைவான ஊதியம். ‘Meagre appearance’ என்றால் மிக ஒல்லியான தோற்றம் என்று அர்த்தம். ‘Meagre diet’ என்றால் அளவு அல்லது தரத்தில் குறைந்த உணவு.
***
‘One lady’ - ‘many ladies’ என்று கூறுகிறோம். ஆனால் ‘One monkey’ ‘Many monkeys’ போல ஏன் இல்லை? - நுணுக்கமாகத்தான் கவனித்திருக்கிறீர்கள். ‘-y’ என்று முடியும் இரண்டு வார்த்தைகள் பன்மையில் இரண்டு விதமாக ஏன் மாறுகின்றன என்கிறீர்கள். ‘One monkey’, ‘many monkeys’ என்றுதான் சொல்வோம். ஏன் அப்படி என்றால் ஒரு ‘noun’இல் உள்ள இறுதி எழுத்து ‘y’ என்பதாக இருந்து, அதற்கு முன்னால் ஒரு ‘vowel’ (அதாவது a, e, i, o, அல்லது u) இடம்பெற்றால் அப்போது இறுதியில் இடம்பெறும் ‘y’ என்கிற எழுத்துக்குப் பின் வெறும் ‘s’ என்கிற எழுத்தை மட்டுமே சேர்க்க வேண்டும்.
இதோ மேலும் சில எடுத்துக்காட்டுகள்: ‘One boy - two boys’; ‘One donkey - three donkeys’; ‘One tray - several trays’. ஆனால், ‘lady’ என்பதில் ‘y’ எழுத்துக்கு முன்பாக இருப்பது ‘vowel’ அல்ல. எனவே பன்மையில் அது ‘-ies’ என மாறும். ‘Lady – ladies’; ‘Body, bodies’.
மேலும் யோசித்தால் வேறு ஒரு கேள்விகூட எழலாம். ‘potato’, ‘tomato’ ஆகிய வார்த்தைகள் ‘o’ என்கிற எழுத்தில் முடிகின்றன. இவற்றைப் பன்மையாக்க வேண்டுமென்றால் இறுதியில் ‘es’ சேர்க்கிறோம். அதாவது ‘potatoes’, ‘tomatoes.’ ஆனால், ‘radio’, ‘video’ போன்ற வார்த்தைகளின் பன்மை ‘radios’, ‘videos’ என்பவைதான். அதாவது ஒருமையோடு வெறும் ‘s’ மட்டுமே சேருகிறது. ஏன் இந்த வேறுபாடு?’.
ஒரு வார்த்தையின் கடைசி எழுத்து ‘o’ என்று இருந்து, அதற்கு முந்தைய எழுத்து ‘vowel’ ஆக இருந்தால் அதோடு ‘s’ சேர்க்கும்போது அது பன்மையாகிறது. ஒரு வார்த்தையின் கடைசி எழுத்து ‘o’ என்று இருந்து, அதற்கு முந்தைய எழுத்து ‘consonant’ ஆக இருந்தால் அதோடு ‘es’ சேர்க்கும்போது அது பன்மையாகிறது. (சில விதிவிலக்குகளும் இதற்கு உண்டு)
***
'நாடு' என்கிற ஒரே வார்த்தை பெயர்ச்சொல்லாகவும் வினைச் சொல்லாகவும் பயன்படுத்த முடியும். ஆங்கிலத்திலும் இப்படி உண்டா? - ‘நாடு' என்பது பெயர்ச்சொல் என்கிற கோணத்தில் ‘country’ என்பதைக் குறிக்கிறது. அதை ‘verb’ ஆகப் பயன்படுத்தும்போது அதன் ஆங்கில வார்த்தைகளாக ‘proceed’, ‘advance’, ‘go’ ஆகியவற்றைக் கூறலாம். ‘நாடு அதை நாடு’ என்கிற பழைய எம்ஜிஆர் பாடல் வரியில் கவிஞர் கண்ணதாசன் நாடு என்கிற சொல்லைப் பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய இரண்டு விதமாகவும் பயன்படுத்தி இருக்கிறார். இப்போது உங்கள் கேள்விக்கான பதில். நிறைய ஆங்கிலச் சொற்களை இப்படி ‘noun’, ‘verb’ ஆகிய இரு விதங்களில் பயன்படுத்த முடியும்.
‘Love is blind’ - ‘I love you’; ‘Bring the brush’ - ‘Brush your teeth’ ; ‘This is her phone’ - ‘Phone him’; ‘I received a mail’ - ‘Mail this letter’.
சிப்ஸ்:
'ரகு' என்பதை ‘Raghu’ என்றும் 'ராகு' என்பதை ‘Raaghu' என்றும் எழுதலாமா? - ‘Ezhudalaamee’ ஒலிப்பியல் (Phonetics) முறையின்படி ‘Raghu' என்பதில் ‘a’ என்கிற எழுத்தின் தலையில் ஒரு சிறிய கோடு ஒன்றைப் (அதாவது அடிக்கோடிடுவதற்குப் பதிலாக மேல் கோடு) போட்டால் அந்தச் சொல்லை 'ராகு' என்று உச்சரிக்க வேண்டும்
‘Geo’ என்றால்? - நில உலகம் சார்ந்த. இது முன்னொட்டாக (prefix) வரும்.
‘Meager’, ‘meagre’ இரண்டில் எது சரி?
‘Meagre’ என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவம். என்றாலும் இதை ‘meager’ என்று எழுதுவது ஷேக்ஸ்பியர் காலத்திலேயே இருந்திருக்கிறது. ‘Meagre' என்றால் மிகக் குறைவான அல்லது அற்பமான என்று பொருள். ‘Meagre salary’ என்றால் மிகக் குறைவான ஊதியம். ‘Meagre appearance’ என்றால் மிக ஒல்லியான தோற்றம் என்று அர்த்தம். ‘Meagre diet’ என்றால் அளவு அல்லது தரத்தில் குறைந்த உணவு.
- aruncharanya@gmail.com