‘இந்து தமிழ் திசை’யின் ‘பெண் இன்று’ சார்பில் சென்னையில் மார்ச் 16 ஞாயிறு அன்று நடைபெற்ற மகளிர் திருவிழாவை வாசகியர் கொண்டாடித் தீர்த்தனர்.
சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மகளிர் திருவிழாவில் எழுத்தாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான ஓவியா, சமூகத்தில் பெண்களின் நிலை குறித்துப் பேசினார். மகப்பேறு மருத்துவரும் ‘மித்ராஸ்’ ஃபவுண்டேஷன் நிறுவனருமான டாக்டர் அமுதா ஹரி, ஆரோக்கியம் சார்ந்து பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்துப் பேசினார். எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக நிர்வாகிகள் மேலாண் மைக் குழுத் தலைவர் டாக்டர் வி.சசிரேகா, வாழ்த்துரை வழங்கினார். பேச்சரங்கத்தைத் தொடர்ந்து கடலூர் செம்மண்டலத்தைச் சேர்ந்த மோகன சங்கரியின் நடனமும் சென்னை மேல்அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா இணைப்புப் பள்ளி மாணவியரின் ‘நீ ஆண், நீ பெண்’ நாடகமும் நடைபெற்றன.
சென்னை நாகூரான் தோட்டத்தைச் சேர்ந்த ‘மீனவ’ சாந்திக்கு ‘வுமன் ஆஃப் சப்ஸ்டன்ஸ்’ விருது வழங்கப்பட்டது. ஃபேஷன் ஷோ, பலூன் உடைத்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வாசகியர் உற்சாகத்துடன் பங்கேற்று பரிசுகளை வென்றனர். மகளிர் திருவிழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவோடு பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை சின்னத்திரை தொகுப் பாளினி தேவி கிருபா கலகலப்பாகத் தொகுத்து வழங்கினார்.
உஜாலா நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ இந்த விழாவை நடத்தியது. லலிதா ஜூவல்லரி, லலிதாம்பிகை கருவுறுதல் மையம், மஹாத்ரி ஃபுட் புராடக்ட்ஸ், ஜெ.டி.எஸ் ஃபுட்ஸ் அண்ட் பர்பிள் ஸ்வீட்ஸ், சத்யா ஏஜென்சீஸ், கோபுரம் மஞ்சள்தூள் & குங்குமம் நிறுவனம், ஸ்ரீ ஐஸ்வர்யா சாரிஸ், ஸ்ரீ மாதங்கி டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் (நண்டு பிராண்ட்), ஹெஸ்த் பாஸ்கெட், சௌபாக்யா என்டர்பிரைசஸ், டோம்ஸ் ஸ்டேஷனரி, கெவின்ஸ் மில்க் ஷேக், காட்டன் ஹவுஸ், ரெபியூட் குடிநீர், பிரே லேடி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் (வடபழனி வளாகம்), பத்மம் ரெஸ்டாரன்ட், வாக் பக்ரி டீ உள்ளிட்ட நிறுவனங்களும் நிகழ்ச்சியை இணைந்து வழங்கின.