பெண் எனும் போர்வாள் - 17: நீதிகேட்கும் சிலைகள்

By பிருந்தா சீனிவாசன்

இரண்டாம் உலகப் போரின்போது ’ஆறுதல் மகளிர்’ என்கிற பெயரில் தங்களைப் பாலியல் சித்தரவதைக்கு ஆளாக்கிய ஜப்பான் ராணுவத்தினர் சார்பில் ஜப்பான் மன்னிப்பு கோர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கை விடுத்தனர். ஜப்பான் ராணுவ வீரர்களின் பாலியல் தேவைக்காக ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பலர் கடத்தப்பட்டுச் சீரழிக்கப்பட்ட கொடுமை குறித்து கொரிய நாட்டுப் பத்திரிகை ஒன்றில் 1990இல் கட்டுரை வெளியானதுமே ஜப்பான் அதிர்ச்சிக்குள்ளானது. ’ஜப்பான் ராணுவத்தினரால் ’ஆறுதல் மையங்கள்’ நடத்தப்பட்டதை மூத்த பெண்மணிகள் வாயிலாக அறிய முடிகிறது. இது குறித்துத் தற்போது விசாரணை நடத்துவதால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை’ என்கிற ஜப்பானின் பதில் கொரியப் பெண்களைக் கொதிப்படையச் செய்தது.

37 பெண்கள் அமைப்பினர் ஒன்றிணைந்து ஜப்பானின் பதிலைக் கண்டித்ததோடு, 6 கோரிக்கைகளையும் முன்வைத்தனர். ஆறுதல் மையங்களில் பாலியல் சுரண்டலுக்காக கொரியப் பெண்கள் ஜப்பான் ராணுவத்தினரால் கடத்தப்பட்டதை ஒப்புக்கொள்ள வேண்டும், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இந்தப் பிரச்சினை குறித்து விரிவான விசாரணை நடத்தி முடிவுகளைப் பொதுவெளியில் அறிவிக்க வேண்டும், ஜப்பான் ராணுவத்தினரால் பாதிக்கப்பட்ட பெண்களை நினைவுகூரும் வகையில் நினைவகம் அமைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கோ அவர்களது வாரிசுகளுக்கோ இழப்பீடு வழங்க வேண்டும், இந்த வரலாறு குறித்து வரும் தலைமுறையினர் உணர்ந்துகொள்ளும் வகையில் கருத்தரங்குகள் நடத்த வேண்டும் என்பவையே அந்த ஆறு கோரிக்கைகள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

16 mins ago

கல்வி

52 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

59 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்