தித்திக்கும் மாம்பழம்

By திலகா

* வெப்பமண்டலப் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் பழங்களில் ஒன்று மாம்பழம். இது கிழக்கு இந்தியா, பர்மா, அந்தமான் தீவுகள் ஆகிய தெற்காசியப் பகுதிகளுக்குச் சொந்தமானது.

* பௌத்த துறவிகள் மாம்பழத்தை மலேசியா, கிழக்கு ஆசியாவில் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தியதாக நம்பப்படுகிறது. புத்தர் ஒரு மா மரத்தின் குளிர்ந்த நிழலில் தியானம் செய்ததாகப் புராணக்கதை கூறுகிறது.

* மா மரம் 35 - 40 மீட்டர் (115-130 அடி) உயரம் வரை வளரக்கூடியது. நீண்ட காலம் வாழும் மரம். சில மாமரங்கள் 300 ஆண்டுகளுக்குப் பிறகும் பழம் தருவதாகச் சொல்லப்படுகிறது.

* மா மரத்தின் பூக்கள் சிறியதாகவும் ஐந்து இதழ்களுடன் வெள்ளையாகவும் இருக்கும். காய்கள் உருவாகி பழுப்பதற்கு 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும்.

* மாம்பழங்கள் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, பச்சை உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் காணப்படுகின்றன. அதே போல வடிவங்களிலும் அளவுகளிலும் வித்தியாசமாகக் காணப்படுகின்றன.

* மாம்பழத்தில் ஏராளமான சத்துகள் உள்ளன. மாங்காயில் வைட்டமின் ‘சி’ அதிகம் இருக்கும். காய் பழுத்து பழமாக மாறும்போது பீட்டா கரோட்டின் (வைட்டமின் ஏ) அளவு அதிகமாக இருக்கும்.

* உலகில் விளைவிக்கப்படும் மாம்பழங்களில் ஏறக்குறைய பாதி அளவுக்கு இந்தியாவில் விளைகிறது. ஆனால், இந்தியாவில் விளைவிக்கப்படும் மாம்பழங்கள் பெரும்பாலும் இந்தியர்களே பயன்படுத்திக்கொள்வதால், சர்வதேச மாம்பழ வர்த்தகத்தில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.

* மாங்காய்களையும் மாம்பழங்களையும் வைத்து ஏராளமான உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. சட்னி, தொக்கு, பச்சடி, குழம்பு, ஊறுகாய் என மாங்காய்கள் பலவிதங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மாம்பழங்களில் பழச்சாறு, சாஸ், இனிப்பு போன்றவை தயாரிக்கப்படுகின்றன.

* மாம்பழம் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் தேசிய பழமாக இருக்கிறது. இது பங்களாதேஷின் தேசிய மரமாகவும் உள்ளது.

* இந்தியாவில் மாம்பழங்களும் மா இலைகளும் விசேஷங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

* சுவைக்கு ஏற்ப மாம்பழங்களின் விலையும் நிர்ணயிக்கப்படுகின்றன.

* மாமரத்தின் அறிவியல் பெயர் மாஞ்சிஃபெரா இண்டிகா.

* பழுத்த மாம்பழத்தில் 14 சதவீதம் சர்க்கரை இருக்கிறது.

* சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் பழங்களில் ஒன்று மாம்பழம்.

* இந்தியாவில் அல்போன்சா, சிந்துரா, பங்கனப்பள்ளி, ரத்னகிரி, நீலம், ஹிசாகர், மல்கோவா, கேசர், பாதாமி, மால்டா, இமாம் பசந்த், பாதிரி போன்ற மாம்பழங்கள் புகழ்பெற்றவை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

இந்தியா

20 mins ago

தமிழகம்

18 mins ago

இந்தியா

20 mins ago

வணிகம்

34 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

47 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

4 hours ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்