மாயா பஜார்

உலக அளவில் விற்பனையில் சாதனை படைத்த 10 சிறார் புத்தகங்கள்

செய்திப்பிரிவு

1. அந்த்வான் எக்சுபெரி எழுதிய ‘லிட்டில் பிரின்ஸ்’ சுமார் 20 கோடிப் பிரதிகள்.

2. ஜெ.கே. ரௌலிங் எழுதிய ‘ஹாரி பாட்டர் அண்ட் தி பிலாசபர்’ஸ் ஸ்டோன்’ சுமார் 12 கோடிப் பிரதிகள்.

3. சி.எஸ். லூயிஸ் எழுதிய ‘தி லயன், தி விச் அண்ட் தி வார்ட்ரோப்’ சுமார் 8.5 கோடிப் பிரதிகள்.

4. ஜோஹன்னா ஸ்பைரி எழுதிய ‘ஹைடி’ சுமார் 5 கோடிப் பிரதிகள்.

5. எல்.எம். மாண்ட்கோமரி எழுதிய ‘ஆன் ஆஃப் கிரீன் கேபில்ஸ்' 5 கோடிப் பிரதிகள்.

6. அன்னா சீவெல் எழுதிய ‘பிளாக் பியூட்டி’ சுமார் 5 கோடிப் பிரதிகள்.

7. பீட்ரிக்ஸ் பாட்டர் எழுதிய ‘தி டேல் ஆஃப் பீட்டர் ராபிட்’ சுமார் 4.5 கோடிப் பிரதிகள்.

8. எரிக் கார்ல் எழுதிய ‘தி வெரி ஹங்ரி கேட்டர்பில்லர்’ சுமார் 4.3 கோடிப் பிரதிகள்.

9. கார்லோ கொல்லோடி எழுதிய ‘தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் பினாக்கியோ’ சுமார் 3.5 கோடிப் பிரதிகள்.

10. ரோல் தால் எழுதிய ‘சார்லி தி சாக்லெட் ஃபேக்டரி’ சுமார் 2 கோடிப் பிரதிகள்.

அவசியம் படிக்க வேண்டிய 10 சிறார் எழுத்தாளர்களின் படைப்புகள்

1. அழ. வள்ளியப்பா: பர்மா ரமணி - சீதை பதிப்பகம், நல்ல நண்பர்கள் - பழனியப்பா பிரதர்ஸ்.

2. வாண்டு மாமா: மர்ம மாளிகையில் பலே பாலு, கண்ணாடி மனிதன் - வானதி வெளியீடு, மரகதச் சிலை - கங்கை புத்தக நிலையம்.

3. ரேவதி (ஈ.எஸ்.ஹரிஹரன்): பவளம் தந்த பரிசு, மின்கல மாதவன் - பழனியப்பா பிரதர்ஸ், கொடி காட்ட வந்தவன் - தமிழ்நாடு காந்தி நினைவு நிதி.

4. பெ. தூரன்: தரங்கம்பாடி தங்கப் புதையல் - வானதி பதிப்பகம், கொல்லிமலைக் குள்ளன் - பழனியப்பா பிரதர்ஸ்.

5. பூவண்ணன்: - சிற்பியின் மகள் - வானதி பதிப்பகம்.

6. கல்வி கோபாலகிருஷ்ணன்: கானகக் கன்னி - சாகித்ய அகாடமி வெளியீடு.

7. முல்லை தங்கராசன்: தங்க மயில் தேவதை - பூங்கொடி பதிப்பகம்.

8. கொ.மா. கோதண்டம்: காட்டுக்குள்ளே திருவிழா - விஜயா பதிப்பகம், குளத்தில் விழுந்த சந்திரன் - நர்மதா பதிப்பகம்.

9. கூத்தபிரான்: பயம் கொள்ளலாகாது பாப்பா... - பழனியப்பா பிரதர்ஸ்.

10. ஜெயந்தி (கல்கி ராஜேந்திரன்): இந்திரா சந்திரா மந்திரா - கல்கி பதிப்பகம்.

SCROLL FOR NEXT