மாயா பஜார்

பறவைகளின் உலகுக்குள் ஊர்வலம் போவோமா!

நிஷா

உங்களைப் போன்ற மாணவர் களுக்குப் பறவைகளின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் www.early-bird.in எனும் இணையதளம் இயங்கிவருகிறது. தற்போது இந்தியப் பறவைகளை அறிந்துகொள்ளும் விதமாக ஐந்து போஸ்டர்களைப் பதிவேற்றி யுள்ளது.

தமிழ், அசாமி, வங்கம், ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தெலுங்கு ஆகிய 10 மொழிகளில் இந்த போஸ்டர்களைப் படிக்க முடியும். போஸ்டர் பக்கத்துக்குச் சென்று, RESOURCES பகுதியை கிளிக் செய்தால் விருப்பமான மொழியைத் தேர்வு செய்யலாம்.

போஸ்டரில் இருக்கும் ஏதாவது ஒரு பறவையின் படத்தை கிளிக் செய்தால், அதன் ஒளிப்படமும் அதைப் பற்றிய விவரமும் நம் முன்னர் விரியும். முக்கியமாக, அந்தப் பறவை எழுப்பும் ஒலி நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும்.

பல்வேறு வாழிடங்களில் உள்ள பறவைகளைப் பற்றி, எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இந்த போஸ்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பறவைகளின் உலகுக்குள் பயணம் செய்வதற்கு இந்தத் தளம் உதவியாக இருக்கும்.

SCROLL FOR NEXT