பொம்மை மருத்துவமனை!

ஆசை ஆசையாக வைத்து விளையாடிய பொம்மை உடைந்துபோனால், உங்கள் அம்மா என்ன செய்வார்? குப்பையில் தூக்கி எறிந்துவிடுவார் அல்லது காயலாங்கடையில் போட்டு விடுவார் இல்லையா? ஆனால், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் பொம்மைகள் உடைந்தால் யாரும் தூக்கிப் போட மாட்டார்கள். உடனே அங்குள்ள டால் ஹாஸ்பிட்டலுக்கு (பொம்மை மருத்துவமனை) எடுத்துப் போய்விடுவார்கள்!

நீங்கள் பொம்மையின் உடைந்த கை, கால், சிதைந்த கண், தலை என எதுவாக இருந்தாலும், எல்லாமே பொம்மை மருத்துவமனைக்கு வந்துவிடும். அங்கு பொம்மைகளை சரி செய்து, புதுசாக மாற்றித் தந்துவிடுவார்கள். ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற இந்த மருத்துவமனை நூறாண்டுகளுக்கு மேலாக இயங்கிக்கொண்டிருக்கிறது. 1913-ம் ஆண்டில் இந்தப் பொம்மை மருத்துவமனை தொடங்கப்பட்டது.

இந்தப் பொம்மை மருத்துவ மனைக்கு வராத பொம்மைகளே கிடையாது. எனவே, சிட்னியில் குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த மருத்துவமனையாக மாறிவிட்டது இந்தப் பொம்மை மருத்துவமனை!

தகவல் திரட்டியவர்: ஜி. ராம்குமார், 9-ம் வகுப்பு, பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி, திருச்சி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE