சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பயணத்தைத் தொடங்கி ‘மாவீரன்’ படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர், மோனிஷா பிளசி. ‘சுழல் 2’ வெப் சீரீஸைத் தொடர்ந்து தற்போது ‘கூலி’, ‘ஜனநாயகன்’ ஆகிய படங்களில் பிஸியாக இருக்கும் அவருடன் ஒரு காபி கோப்பை உரையாடல்:
சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா? - காலை நேரத்தில் படப்பிடிப்பு நடந்தால் சூரியனையும் சேர்த்துப் பார்ப்பேன். மற்றபடி ‘லேட்’டாக எழுறதுதான் வழக்கம்!
‘ஒர்க் அவுட்’டா, ‘டயட்’டா? - உடல் ஆரோக்கியத்துக்கான, எடை அதிகரிப்பதற்குமான உணவு வகை களையே சாப்பிடுகிறேன். அதனால் ஒர்க்-அவுட், டயட்டெல்லாம் ஃபாலோ பண்றதில்லை.
தனித்துவமான பழக்கம்? - மகிழ்ச்சி, சோகம், தனிமை என எந்தத் தருணத்திலும் உணர்வுகளை வெளிப்படுத்த ஓவியங்களை வரைய ஆரம்பிச்சிடுவேன்.
‘கம்-பேக்’ தருணம்? - நிறைய வாய்ப்புகள் கைநழுவிச் சென்றுள்ளன. ‘குக் வித் கோமாளி சீசன் 4’ இல் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததன் மூலம் எனக்குத் தனி அடையாளம் கிடைச்சது.
இந்த வேலை இல்லையென்றால்? - ஓவியம் தொடர்பாக ஏதாவது வேலையிலோ அல்லது ஆசிரிய ராகவோ இருந்திருப்பேன். எனக்கு ‘ஆர்ட்’தான் எல்லாமே!
எதிர்காலத் திட்டம்? - துபாய்க்குச் செல்ல வேண்டும்; சொந்த வீட்டில் குடியேற வேண்டும் என்கிற திட்டமும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கு.
புத்தக வாசிப்பா, திரை அனுபவமா? - புத்தக வாசிப்பில் என்னால் பெரிதாகக் கவனம் செலுத்த முடியாது. அதனால் சினிமாதான் என்னோட சாய்ஸ்.
பொழுதுபோக்கு? - கண்டிப்பாக ஓவியம் வரையறதுதான். கையால் வரைவது, டிஜிட்டல் தளத்தில் வரைவது எனப் பல்வேறு பரிமாணங்களை முயற்சி செய்வேன்.
பிடித்த சமூக வலைதளம் எது, ஏன்? - அப்போது முதல் இப்போதுவரை இன்ஸ்ட கிராம்தான் என் ஃபேவரைட்.
மனதில் பதிந்த வரி? - ‘Everything happens for a reason’.
மறக்க முடியாத நபர்? - நிறையப் பேர் இருக்காங்களே. படப்பிடிப்பு தளத்துக்கே வந்து எனக்கு ‘ஐபாட்’ பரிசளித்து அன்புப் பாராட்டிய ‘குக் வித் கோமாளி’ ரசிகர். அந்தத் தருணத்தை மறக்க முடியாது.
உறங்கவிடாத ஒன்று? - ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் இரவும், நிகழ்ச்சிக்குப் பிறகும் அந்த விஷயத்தைச் சரியாக செய்தோமா எனத் திருப்தி அடையாமல் யோசித்து யோசித்து தூக்கத்தையே தொலைச் சிடுவேன்.
திரும்பத் திரும்பப் போக விரும்பும் இடம்? - என்னுடைய அறையில் ‘டிராயிங் டேபிள்’ இருக்கும் இடமும் சர்ச்சும்.