‘என் ராண்ட்ட கொஞ்சம் கேளு’, ‘காக்கா கத’, ‘எதுவும் கிடைக்கலேன்னா’ என இளைய தலைமுறையினர் மத்தியில் தமிழ் சுயாதீன ‘ஹிட்’ பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்தவர் வைசாக். 2023இல் வெளியான ‘துணிவு’ படம் மூலம் கோலிவுட்டில் பாடலாசிரியராக அறிமுகமாகி தொடர்ந்து பணியாற்றிவருகிறார்.
மெட்டுக்கு ஏற்ப பாடல் வரிகளை எழுதிக்கொண்டிருந்தவரோடு ஒரு காபி கோப்பை உரையாடல்:
சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா? - ‘நைட்-ஷிஃப்ட்’டில் வேலை ஓடிக்கொண்டிருப்பதால், நமக்குப் பொழுது விடிவதே பகல் 12 மணிக்குத்தான்.
‘ஒர்க் அவுட்’டா, ‘டயட்’டா? - தற்போதைக்கு ரெண்டுமே இல்லை. ஆனால், 2025இல் ஒர்க் அவுட்டும் டயட்டும் ஃபாலோ பண்ணணும். நடக்குதான்னு பார்ப்போம்.
தனித்துவமான பழக்கம்? - நான் ஒரு தனிமை விரும்பி. தனிமையான நேரத்தில் எழும் எண்ணங்களைப் பாடல் வரிகளாக்க முயற்சி செய்வேன். நல்லா ‘அவுட்-புட்’ வந்திருக்கு.
மறக்க முடியாத தருணம்? - எனக்கு ‘அட்மிஷன்’ கிடைக்காமல் போன ஒரு பிரபல கல்லூரிக்கு ‘கெஸ்ட்’டாகச் சென்ற தருணம்.
இந்த வேலை இல்லையெனில்? - வேறு துறைக்கு ‘ஜம்ப்’ ஆகியிருக்க மாட்டேன். சினிமாவுக்குள்ளேயே இயக்குநராக முயற்சி செய்திருப்பேன்.
‘பக்கெட்-லிஸ்ட்’ ஷேரிங்ஸ்? - பாடலாசிரியராக, கம்போசராக ‘எண்ட்ரி’ ஆகியாச்சு. அப்படியே நல்ல கதைகளையும் அடுத்து எழுத வேண்டும்.
புத்தக வாசிப்பா, திரை அனுபவமா? - எப்போதும் ‘மூவீஸ்’ அனுபவம்தான்.
பொழுதுபோக்கு? - கேரம்போர்டு, வீடியோ கேம்ஸ் விளையாட ரொம்பப் பிடிக்கும்
பிடித்த சமூக வலைதளம்? - சோஷியல் மீடியாவால் பல நல்ல உள்ளங்களைச் சந்தித்திருக்கிறேன். எனக்கு எப்போதும் ஃபேஸ்புக்தான் ‘ஃபேவரைட்’.
மறக்கவே முடியாத நபர்? - இரண்டு பேர். ஃபேஸ்புக்கில் பழக்கமாகி நட்பாகி இருந்தாலும் என்றைக்கும் எனக்கு உறுதுணையாக இருக்கும் நண்பர்கள் வினோவும் ‘ஸ்மார்ட்’ ராகவனும்.
மனதில் பதிந்த பாடல் வரி? - என்ன ஆனாலும் ‘தன்னந்தனியா ‘vibe’ஆ சுத்தினிரு...’
மறக்க முடியாத தேதி? - 2023இல் முதல் முறையாக என் ஆதர்ச இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவைச் சந்தித்த நாள்.
உறங்கவிடாத ஒன்று? - என்னுடைய பாடல்கள் ரிலீஸாகும்போது மனதில் எற்படும் ஒரு ‘ரஷ்’ ஒழுங்காகத் தூங்கவிடாது!
திரும்பதிரும்பப் போக விரும்பும் இடம்? - வீட்டில் என்னுடைய ‘சேர்’ இருக்கும் ‘ஸ்பாட்’. பெரும்பாலும் அந்த ‘ஸ்பாட்’டில் என்னைப் பார்க்கலாம்.