அனைவராலும் போற்றத்தக்க மதத் தலைவராக இருந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வாழ்க்கைச் சரித்திரத்தை விளக்கும் நூலாக ‘தி இந்து பதிப்பக குழுமம்’ வெளியிட்ட ‘உண்மையின் அவதாரம் – காஞ்சி மகாஸ்வாமி’ என்ற நூல் விளங்குகிறது. மகாஸ்வாமியின் 131-வது ஜெயந்தியை முன்னிட்டு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியான ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நவீன காலத்திலும் பாரம்பரிய சாஸ்திர சம்பிரதாயங்களை கடைபிடிப்பதில் உறுதியாக இருந்தார். எளிமையைக் கடைபிடித்த மகாஸ்வாமியின் எண்ணங்கள், பகுத்தறிவு, உணர்திறன், கருணை ஆகியன உயர்ந்த இடத்தில் உள்ளன. அனைத்து தரப்பு மக்களிடையே நல்லிணக்கம், எளிமையாக வாழ்தல், ஏழைகள் மீது கருணை போன்ற லட்சியங்கள்; கடுமையான பேச்சைத் தவிர்த்தல், பிற மதங்கள் மீது துவேஷம் இல்லாமை, அவரவர் விருப்பப்படி பிற மதங்களைப் பின்பற்ற அனுமதிப்பது ஆகியன இன்றும் மிகப் பொருத்தமாக உள்ளது.
மஹா பெரியவரை யார் தரிசித்தாலும் அவருடைய எளிமை, கற்றல், கருணை ஆகியவற்றைக் கண்டு வியப்பதுண்டு. காதி அணிந்து மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். தனது பெரும்பான்மையான நேரத்தை பூஜை, மக்களுக்கு அறிவுரை வழங்குதல், சொற்பொழிவுகள் ஆகியவற்றில் செலவிட்டார்.
மகாஸ்வாமியுடன் ஒரு மணி நேரச் சந்திப்புக்குப் பிறகு மகாத்மா காந்தி நிறைவாக உணர்ந்தார். தமிழ்த் தாத்தா உ.வே.சுவாமிநாத ஐயர், அவர் பூஜை செய்வதைப் பார்த்து மெய்சிலிர்த்தார். மகாஸ்வாமியுடனான சந்திப்புக்குப் பிறகு பால் ப்ரண்டன் உருமாறிப் போனார். பல அரசியல் தலைவர்கள் அவரை மீண்டும் மீண்டும் தரிசிக்க விருப்பம் கொண்டனர்.
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், மகாஸ்வாமி, பெரியவா என்று அழைக்கப்படும் மகானுடன், ‘தி இந்து’ பத்திரிகை மிகவும் நெருக்கமான தொடர்பு கொண்டிருக்கிறது. அவரது பயணம், சொற்பொழிவுகள் ஆகியவற்றை பத்திரிகையில் பல தசாப்தங்களாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.
காஞ்சி மகாஸ்வாமியின் வாழ்க்கை சரித்திரம் குறித்த நூலை இரண்டு தொகுதிகளாக, ‘தி இந்து’ குழுமம் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலத்தில் வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, தற்போது அந்த நூலின் தமிழ் பதிப்பை வெளியிட்டுள்ளது.
காஞ்சி மகாஸ்வாமி, பீடாதிபதியாக பட்டமேற்றது முதல் அவரது விஜய யாத்திரை, யாத்திரைகளின்போது அவரது செயல்பாடுகள், திட்டங்கள், அவரது முகாம்களில் நடைபெற்ற நிகழ்வுகள், சொற்பொழிவுகள், பல்வேறு இடங்களில் அவருக்கு கிடைத்த வரவேற்பு குறித்து, ‘தி இந்து’ பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்திகள், வெளிவந்த புகைப்படங்கள் ஆகியவற்றைத் தொகுத்து ‘தி இந்து’ பதிப்பக குழுமம் சார்பில் ‘உண்மையின் அவதாரம் - காஞ்சி மகாஸ்வாமி’ என்ற நூல் தற்போது 2 தொகுதிகளாக தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.
நூலின் முதல் தொகுதி, மகாஸ்வாமி காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியாக பட்டமேற்றது முதல் அவரது முதல் விஜய யாத்திரை சம்பவங்களை விவரிக்கிறது. இரண்டாம் தொகுதி, மகாஸ்வாமி மேற்கொண்ட நடைபயணம் (மாரத்தான்), 1985-ல் காஞ்சிபுரம் திரும்பியது, சித்தி அடைந்தது தொடர்பான செய்திகளை விவரிக்கிறது. மேலும், தனது பரமகுரு மகாஸ்வாமி குறித்து ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நினைவுகூரும் சம்பவங்களும், புதிய பீடாதிபதி ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பீடாரோஹண நிகழ்வு செய்திகளும் இரண்டாவது தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.
நூல்களைப் பெற… ‘உண்மையின் அவதாரம் – காஞ்சி மகாஸ்வாமி’ நூலின் விலை (2 தொகுதிகளையும் சேர்த்து) ரூ. 799. தற்போது 25 % தள்ளுபடி விலையில் ரூ.599-க்கு பெற்றுக் கொள்ளலாம்.
இந்நூலை பெற விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய லிங்க் publications.thehindugroup.com/bookstore மொத்தமாக வாங்க விரும்புபவர்கள் bookstore@thehindu.co.in என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு 18001021878 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.