சிவபெருமானின் அம்சமாக தோன்றியவர் அனுமன். இவர் ராமபிரானின் தூதராக விளங்கியவர். அனுமன் கோயிலுக்கு சென்று அனுமனைத் தரிசிக்கும் போது, அனுமனின் வாலில் குங்குமம் வைத்து வணங்க வேண்டும் என்று கூறப்படுவதுண்டு. சூரிய பகவானிடம் பாடம் கற்று, அனு மன் சூரியனை வலம் வந்தபோது மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரியனுடன் அனுமனையும் சேர்த்து வலம் வந்தன.
இதனால் அனுமனின் வாலுக்குப் பின்புதான் நவக்கிரகங்கள் இருக்க வேண்டியதாகிவிட்டது. அனுமனை வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களின் பாதிப்புகள் எதுவும் இருக்காது. ராவணன் அனுமனின் வாலுக்கு தீ வைத்தபோது, சீதை வேண்டியதால் வெம்மையும் குளிர்ச்சியாகவே இருந்தது. நெருப்பால் ஏற்படும் காயங்களிலிருந்து குணம் அடைய அனுமனை வழிபடலாம்.
ராவணனின் சபையில் அனுமன் தன் வாலால் ஏற்படுத்திய சிம்மாசனத்தில் அமர்ந்து பேசி, ராவணனின் கர்வத்தை அடக்கினார். இதன் மூலம் அனுமனின் வாலுக்குத் தனிப்பெருமை கிடைத்தது.
ஆஞ்சநேயரின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் இட்டு 48 நாட்கள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் நவகிரகங் கள் அனைத்தையும் முழுமையாக வழிபட்டதற்குச் சமமாகும். இந்த வழிபாடு நவக்கிரக வழிபாட்டை விட மேலான தாகக் கருதப்படுகிறது. இதனால் நினைத்தவை அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.