தல வரலாறு: ஒரு முறை பிருகு முனிவர், திருமாலின் மார்பில் உதைக்க, சினம் கொண்ட மகாலட்சுமி பெருமாளை பிரிந்துபூலோகம் வந்து அரியமங்கை தலத்தை அடைகிறார்.
‘இனி என்றும் பெருமாளை விட்டு பிரியக்கூடாது’ என்று மகாலட்சுமி, சத்திய கங்கை தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை வணங்கி, நெல்லிப்பழம் மட்டுமே உண்டு, தவம் செய்தார். இதன் பலனாக மகாவிஷ்ணு இந்த தலத்துக்கு வந்து தானும் சிவபெருமானை வழிபட்டு மீண்டும் மகாலட்சுமியுடன் சேர்ந்தார். இங்கு விஷ்ணுவும் சிவனை வழிபட்டதால், சிவனுக்கு ‘ஹரி முக்தீஸ்வரர்’ என்ற பெயர் ஏற்பட்டது.
கோயில் சிறப்பு: சப்த மாதர்களில் ஒருவரான மகேஸ்வரி வழிபட்ட தலம். காசியில் இருந்து வந்த தம்பதிக்கு இந்த தலத்தில் உள்ள அம்பாள் 8 - 11 வயது பெண்ணாக காட்சியருளிய தலம். சப்த மங்கைத் தலங்களுள் ஒன்றான இங்கு ஆஞ்சநேயர், மனைவி சுவர்ச்சலா தேவியுடன் திருமண கோலத்தில் அருள்கிறார்.
பிரார்த்தனை: நவராத்திரி நாயகி ஆயுர் தேவி ஒன்பது கைகளுடன் அருளும் தலம். வாழ்வில் உள்ள இன்னல்கள் விலக,நவக்கிரக தோஷம் நீங்க, பிரிந்த தம்பதி ஒன்று சேர இங்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
அமைவிடம்: தஞ்சை - கும்பகோணம் செல்லும் வழியில், அய்யம்பேட்டை என்ற ஊரில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6-12, மாலை 4-8 மணி வரை.
மூலவர்: ஹரிமுக்தீஸ்வரர்
அம்பாள்: ஞானாம்பிகை