IPL 2023: LSG vs MI | ஆகாஷ் மத்வாலின் 5 விக்கெட் - லக்னோவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

By செய்திப்பிரிவு

சென்னை: 2வது குவாலிபையர் போட்டியில் லக்னோ அணியை சுருட்டி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

183 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு இந்த நாள் சிறப்பாக அமையவில்லை. 2வது ஓவரே 3 ரன்கள் எடுத்திருந்த பிரேரக் மன்கட் முதல் விக்கெட்டாக நடையைக் கட்ட லக்னோ அணியின் சரிவு ஆரம்பமானது. கைல் மேயர்ஸ் (18 ரன்கள்), க்ருனால் பாண்டியா (8 ரன்கள்) என டாப் ஆர்டர் மட்டுமல்ல, மொத்த ஆர்டரும் மும்பை வீரர் ஆகாஷ் மத்வால் பந்துவீச்சில் சரிந்தது.

லக்னோ அணிக்கு ஆறுதலாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 40 ரன்கள் சேர்த்திருந்தார். அவரும் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆக ஆட்டம் மெல்ல மெல்ல மும்பை இந்தியன்ஸ் வசம் சென்றது. 15வது ஓவரில் லக்னோ 100 ரன்களை தொட்ட சமயத்தில் 9 விக்கெட்டை இழந்தது. சில நிமிடங்களில் 101 ரன்கள் எடுத்த கையோடு ஆல் அவுட் ஆனது.

இன்றைய போட்டியில் லக்னோ தரப்பில் மொத்தம் மூன்றுபேர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்களைச் சேர்த்தனர். தீபக் ஹூடாவும் 15 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். இறுதியில் லக்னோ 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

மும்பை தரப்பில் ஆகாஷ் மத்வால் 3.3 ஓவர்கள் வீசி ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்களை கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

மும்பை இந்தியன்ஸ் இன்னிங்ஸ்: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா இம்முறை சோபிக்காமல் 11 ரன்களிலேயே வெளியேறினார். இஷான் கிஷன் 15 ரன்களில் நடையைக் கட்ட அடுத்து பாட்னர்ஷிப் அமைத்த கேமரூன் கிரீன் - சூர்ய குமார் யாதவ் இணை லக்னோ பந்துவீச்சை விளாசித்தள்ளினர். இதன் எதிரொலியாக 10 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த மும்பை 98 ரன்களைச் சேர்த்தது.

2 சிக்சர்களுடன் 20 பந்துகளில் 33 ரன்களைச் சேர்த்த சூர்யகுமார் யாதவை நவீன் உல் ஹக் அவுட்டாக்க, தன்னுடைய பாட்னரை இழந்த சோகத்தில் கேமரூன் கிரீன் அதே ஓவரில் விக்கெட்டானார். அவர் 23 பந்துகளில் 41 ரன்களைச் சேர்த்திருந்தார். அடுத்து ஒன்றிணைந்த திலக் வர்மா - டிம் டேவிட் இணை கடமைக்கு பொறுமையாக ஆடினர். ஆனால் அவர்களின் பொறுமையான ஆட்டத்துக்கு யாஷ் தாக்கூர் முற்றுப்புள்ளி வைக்க டிம் டேவிட் 13 ரன்களுடன் கிளம்பினார். அடுத்து திலக் வர்மா 26 ரன்களுடனும், கிறிஸ் ஜோடன் 4 ரன்னுடன் அவுட்டாக ஆட்டம் மந்தமானது. நேஹால் வதேரா கடைசி நேர நம்பிக்கையாக 2 சிக்சர்கள் விளாச கடைசி ஓவரில் அவுட்டானார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த மும்பை 182 ரன்களை குவித்தது.

லக்னோ அணி தரப்பில், நவீன் உல் ஹக் 4 விக்கெட்டுகளையும், யாஷ் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், மோஹ்சின் கான் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

49 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்