சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சிஎஸ்கே - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதல்

By Guest Author

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி மோதவுள்ளது.

சிஎஸ்கே அணி இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 13 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. கடைசியாக சிஎஸ்கே அணி, சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எளிதில் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முன்னேறியது.

மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஆட்டத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் சிஎஸ்கே அணி இன்று களமிறங்குகிறது. இந்த ஆட்டத்திலும் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் தனது இடத்தை அதிகரித்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ், டேவன் கான்வே ஆகியோர் இந்த போட்டியிலும் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் தீவிரமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையுடனான ஆட்டத்தில் ருதுராஜ் 30 ரன்களும் (16 பந்துகள்), டேவன் கான்வே 44 ரன்களும் சேர்த்தனர்.

அதேபோல் நடு வரிசையில் அஜிங்க்ய ரஹானே, ஷிவம் துபே ஆகியோர் பலம் சேர்த்து அணிக்குத் தூண்களாக உள்ளனர். கடந்த சில ஆட்டங்களாக தனது மட்டைத் திறனை சரியாக வெளிப்படுத்தாத அம்பதி ராயுடு, மொயின் அலி ஆகியோர் பேட்டிங்கில் பிரகாசிக்கக்கூடும்.

பெரும்பாலும் 7 அல்லது 8-வது வீரராக களமிறங்கும் தோனி, இந்தஆட்டத்தில் முன்கூட்டியே களமிறங்கவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதேபோல் பந்துவீச்சில் கடந்த ஆட்டத்தில் தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்களது உயர்மட்டத் திறனை வெளிப்படுத்தி விக்கெட்களைச் சாய்த்தனர். அதேபோல் கடைசி ஓவர்களில் அபாரமாக பந்துவீசி பதிரனா 3 விக்கெட்களை வேட்டையாடி எதிரணி வீரர்களை அச்சுறுத்தினார். அவரது அதிரடி பந்துவீச்சு இந்த ஆட்டத்திலும் வெளிப்படும் என எதிர்பார்க்கலாம்.

அதேநேரத்தில் டெல்லி அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்விகளைப் பெற்று களம் காண்கிறது.

கடைசியாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனான ஆட்டத்தில் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றிருந்தது. தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான பிலிப் சால்ட் அருமையாக விளையாடி 87 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.அவருடன் பேட்டிங்கில் கேப்டன் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், அக்சர் படேல், மணீஷ் பாண்டே ஆகியோரும் பலம் சேர்க்கின்றனர்.

பந்துவீச்சில் கலீல் அகமது, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் எதிரணியை அச்சுறுத்தி வருகின்றனர். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் டெல்லி அணி வீரர்கள் தங்களது உயர்மட்டத் திறனை வெளிப்படுத்துவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெறும்பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் முன்னேறி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும். இரு அணிகளுக்குமே இந்த ஆட்டம் மிக முக்கியமானது என்பதால், ஆட்டத்தில் அனல்பறக்கும் என்பதுரசிகர்களின் எதிர்பார்ப்பு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 mins ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்