IPL 2023: LSG vs PBKS | சிக்கந்தர் ராசாவின் ஆல் ரவுண்டர் பெர்ஃபாமென்ஸ் - 3வது வெற்றியை ருசித்த பஞ்சாப்

By செய்திப்பிரிவு

லக்னோ: 16வது ஐபிஎல் லீக் ஆட்டத்தின் 21-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

160 ரன்கள் இலக்கை துரத்திய அந்த அணிக்கு ஷிகர் தவான் இல்லாததால் புதுமையான இணை ஓப்பனிங்காக களம்கண்டது. ஆனால் அது நிலைக்கவில்லை. அறிமுக வீரராக களமிறங்கிய அதர்வா தைடேவை லக்னோ அணியில் அறிமுகம் கண்ட யுத்வீர் சிங் பூஜ்ஜியத்தில் அவுட் ஆக்கினார். அவரை மட்டுமல்ல மற்றொரு ஓப்பனர் பிரப்சிம்ரன் சிங்கையும் 4 ரன்களில் நடையைக்கட்ட வைத்தார் யுத்வீர் சிங்.

யுத்வீர் சிங்கின் அபார பந்துவீச்சால் பஞ்சாப் கிங்ஸ் ஆட்டம் கண்டது. அந்த அணியை மீட்டெடுக்க முயற்சித்தனர். மேத்தேயூ ஷார்ட் மற்றும் ஹர்பிரீத் சிங் பாட்டியா இருவரும். மேத்தேயூ ஷார்ட் அதிரடியாக தொடங்கினாலும், அதே வேகத்தில் அவுட் ஆகவும் செய்தார். 34 ரன்கள் சேர்த்த திருப்தியோடு அவர் பெவிலியன் திரும்ப, ஹர்பிரீத் சிங் 22 ரன்களோடு தனது நிதான ஆட்டத்தை முடித்துக்கொண்டார்.

சாம் கரனை ரவி பிஷ்னோய் பார்த்துக்கொள்ள, பஞ்சாப் அணிக்கு நம்பிக்கை அளித்தார் ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராசா. ஒருபுறம் விக்கெட் சரிவுகள் இருந்தாலும், திறம்பட விளையாடிய ராசா அரைசதம் கடந்த நிலையில் 57 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதிக்கட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கான் 23 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 3 பந்துகள் மீதமிருக்கையில் 8 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டிய பஞ்சாப் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

லக்னோ தரப்பில் யுத்வீர் சிங், ரவி பிஷ்னோய், மார்க் வுட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். நடப்பு தொடரில் பஞ்சாப் பெறும் 3வது வெற்றி இதுவாகும்.

லக்னோ இன்னிங்ஸ்: டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கைல் மேயர்ஸ், கே.எல்.ராகுல், அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். கைல்ஸ் மேயர் 7வது ஓவரில் 29 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த தீபக் ஹூடா 2 ரன்களில் கிளம்பினார்.

குருணால் பாண்டியா 18 ரன்களிலும், நிகோலஸ் பூரான் ரன் எடுக்காமலும் பெவிலியன் திரும்ப கே.எல்.ராகுல் மறுபுறம் நின்று அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மார்கஸ் ஸ்டோனிஸ் 15 ரன்களில் அவுட்டானதும், 56 பந்துகளில் 74 ரன்களை குவித்த கே.எல்.ராகுலும் கிளம்பினார். கிருஷ்ணப்பா கௌதம், யுத்வீர் சிங் வரிசையாக விக்கெட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மட்டுமே சேர்த்தது.

பஞ்சாப் அணி தரப்பில் சாம் கரன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டையும், அர்ஷ்தீப் சிங், சிக்கந்தர் ராசா, ஹர்ப்ரீத் பரார் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

17 mins ago

தமிழகம்

38 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்