தென் ஆப்பிரிக்கா உலக சாதனை வெற்றி | டி20-யில் உடைந்த சாதனைகள்; 81 பவுண்டரிகள் 35 சிக்சர்கள்!

By ஆர்.முத்துக்குமார்

தென் ஆப்பிரிக்கா: சென்சூரியன் மைதானத்தில் நேற்று நடந்த டி20 போட்டியில் பல சர்வதேச சாதனைகள் உடைந்தன. வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 258/5 என்று குவித்தது ஒரு சாதனை என்றால் அதை விரட்டிய தென் ஆப்பிரிக்கா 259/4 என்று வெற்றி பெற்றது புதிய உலக சாதனையாகும்.

வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்ததில் கைல் மேயர்ஸ் 27 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்தார். ஜான்சன் சார்லஸ் 46 பந்துகளில் 10 பவுண்டரிகள் 11 சிக்சர்களுடன் 118 ரன்கள் விளாசித்தள்ளினார். ரோவ்மென் போவெல் 19 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 28 ரன்களை விளாசினார். ரொமாரியோ ஷெப்பர்ட் 18 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 41 ரன்கள் விளாச மே.இ.தீவுகள் 258 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் குவிண்டன் டி காக் 44 பந்துகளில் 9 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 100 ரன்களை விளாசினார். ரீசா ஹென்றிக்ஸ், 28 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 68 ரன்கள் விளாசினார். கடைசியில் அய்டன் மார்க்ரம் 38 ரன்களை விளாச 18.5 ஓவர்களில் 259/4 என்று உலக சாதனை வெற்றி பெற்று தொடரை இதுவரை 1-1 என்று சமன் செய்துள்ளது.

சாதனைத் துளிகள்:

* இதற்கு முன்பு சர்வதேசப் போட்டியில் 2018-ல், நியூஸிலாந்துக்கு எதிராக 244 ரன்களை ஆஸ்திரேலியா சேஸ் செய்ததே சாதனை விரட்டலாகும்.

* டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு போட்டியில் 500 ரன்களுக்கும் மேல் எடுக்கப்பட்டதும் நேற்று ஒரு புதிய உலக சாதனையாகும். அனைத்து டி20 கிரிக்கெட்டிலும் இதுவே சாதனை. இதற்கு முன்னர் முல்டான் சுல்தான்ஸ், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையே பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் 515 ரன்கள் குவிக்கப்பட்டதே சாதனை.

* தென் ஆப்பிரிக்காவின் முந்தைய அதிகபட்ச ஸ்கோர் இங்கிலாந்துக்கு எதிரான 241/6. வெஸ்ட் இண்டிஸ் அணி இந்தியாவுக்கு எதிராக 245/6 என்று எடுத்ததே அதிகபட்ச டி20 ஸ்கோர்.

* தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று 81 பவுண்டரிகள் அதிகபட்சமான சாதனையாகும். இதற்கு முன்னால் 78 பவுண்டரிகள் தனியார் டி20 போட்டியில் சுல்தான்ஸ் அணிக்கும் கிளாடியேட்டர்ஸ் அணிக்கும் இடையே நடந்த போட்டியில் அடிக்கப்பட்டது.

* நேற்றைய போட்டியில் அடிக்கப்பட்ட 35 சிக்சர்கள் இன்னொரு டி20 உலக சாதனையாகும். பல்கேரியா/ செர்பியா போட்டியில் இதற்கு முன்பு 33 சிக்சர்கள் விளாசப்பட்டதே அதிகம். வெஸ்ட் இண்டீஸ் 22 சிக்சர்கள் விளாசியது, இது ஆப்கானிஸ்தான் அயர்லாந்துக்கு எதிராக 2019-ல் எடுக்கப்பட்ட சாதனையைச் சமன் செய்துள்ளது.

* பவர் ப்ளே முடிந்தவுடன் தென் ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 102, 2021-ல் வெஸ்ட் இண்டீஸ் 98/4 என்று எடுத்ததே பவர் ப்ளே டி20 அதிகபட்ச ஸ்கோராகும்.

* 15 பந்துகளில் குவிண்டன் டி காக் அரைசதம் அடித்தார். இது ஒரு தென் ஆப்பிரிக்கா சாதனையாகும். 2020-ல் இங்கிலாந்துக்கு எதிராக 17 பந்தில் அரைசதம் விளாசினார்.

* அதே போல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி சத நாயகன் ஜான்சன் சார்லஸ் 39 பந்துகளில் சதம் எடுத்தார், 39 பந்துகளில் சதம் விளாசிய 4வது வீரர் ஆனார் ஜான்சன் சார்லஸ்.

* இதுவரை தென் ஆப்பிரிக்கா, இந்தியா மட்டுமே 4 முறை 200+ இலக்கை வெற்றிகரமாக விரட்டிய அணிகளாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

க்ரைம்

50 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்