இந்தியா – ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற ஆஸி., பேட்டிங் தேர்வு

By செய்திப்பிரிவு

நாக்பூர்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் (பிப்.9) இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. டேவிட் வார்னரும், உஸ்மான் க்வாஜாவும் துவக்க ஆட்டக்காரர்களாக இறங்கியுள்ளனர்.

இந்திய அணியின் தரப்பில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் சூர்யகுமார், பரத் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக களம் காண்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ் முடிந்ததும் பேட்டியளித்த ரோஹித் சர்மா, "டாஸ் வென்றிருந்தால் நாங்களும் பேட்டிங்கே தேர்வு செய்திருப்போம். அது ஸ்பின்னர்ங்களுக்கு நல்ல உதவியாக இருக்கும். இப்போது என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். கடந்த 4, 5 நாட்களாக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுள்ளோம். எல்லா சவால்களையும் கணித்து பயிற்சி மேற்கொண்டோம். இந்தத் தொடரின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளோம். இது நீண்ட தொடர். இதில் வெற்றி பெற வேண்டும்" என்றார்.

19 ஆண்டு கனவு நிறைவேறுமா? இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பார்டர்-கவாஸ்கர்டிராபிக்கான 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் நாக்பூரில் உள்ளவிதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியத்தும் வாய்ந்ததாக உள்ளது.

ஏனெனில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வேண்டுமானால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி கணிசமான அளவில் வெற்றிகளை குவிக்க வேண்டும்.

அதேவேளையில், உலகின் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியா 19 வருடங்களுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியுள்ளது.

கடந்த 2018-19 மற்றும் 2020-21-ம் ஆண்டு பார்டர்-கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்திய அணி தோற்கடித்து இருந்தது. தொடர்ச்சியான இந்த இரு தோல்விகளுக்கு இம்முறை பதிலடி கொடுப்பதிலும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டக்கூடும். ஆஸ்திரேலிய அணி இம்முறை தனது பயிற்சி முறைகளிலும் பல்வேறு மாற்றங்களை செய்திருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்