பயிற்சி ஆட்டத்திற்கு கிரீன்டாப் பிட்ச்: டெஸ்ட் போட்டிகளில் குழி பிட்ச் - ஸ்டீவ் ஸ்மித் கருத்திற்கு அஸ்வின் பதில்

By ஆர்.முத்துக்குமார்

முன்பெல்லாம் எந்த அணி எந்த அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் எங்கு ஆடினாலும் பயிற்சி ஆட்டங்களை பயணம் செய்யும் அணி கேட்டுப் பெறும். ஆனால் இப்போதெல்லாம் பயிற்சி ஆட்டங்களே தேவையில்லை என்கின்றனர். இதன் முதல் உதாரணம் இந்திய அணி. ஏனெனில் டைட்டாக ஒரு ஷெட்யூலில் பயிற்சி ஆட்டத்தில் ஆட முடியாது, மேலும் பயிற்சி ஆட்டத்தில் முக்கிய வீரர் காயமடைந்தால் அது தொடரையே நாசம் செய்துவிடும் என்று பல காரணங்கள் கூறப்படுகின்றன.

ஆனால் தற்போது 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி பயிற்சி ஆட்டம் வேண்டாம் என்று கூறியதற்குக் காரணம் முற்றிலும் வேறு. பயிற்சி ஆட்டத்தில் ‘கிரீன் டாப்’ பிட்சைக் கொடுத்துவிட்டு கண் துடைப்பு செய்துவிட்டு டெஸ்ட் போட்டிகளுக்கு ஸ்பின் பந்துகள் பயங்கரமாகத் திரும்பி, எழும்பி, காலுக்குக் கீழ் செல்லும் குழிப்பிட்களையே போடுவார்கள் என்பதுதான் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் பிசிசிஐ மீது வைக்கும் கடும் குற்றச்சாட்டாகும். அதனால்தான் இந்த முறை பயிற்சி ஆட்டத்தை வேண்டாம் என்று கூறி அஸ்வின் டூப்ளிகேட்டை வைத்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் ஆஸ்திரேலிய அணியினர்.

கடந்த 2017 தொடரின் போது பிரபோர்ன் ஸ்டேடியத்தில் பயிற்சி ஆட்டத்தின் பிட்ச் கிரீன் டாப். ஆனால் அதன் பிறகு முதல் டெஸ்ட் போட்டி புனேயில் நடந்தபோது ஸ்பின் பிட்ச் என்ற பெயரில், ‘டர்னர்’ என்ற பெயரில் குழிப்பிட்சைப் போட்டனர் என்பது ஸ்மித்தின் குற்றச்சாட்டு.

அதாவது பயிற்சி ஆட்டத்தில் சம்பந்தா சம்பந்தமில்லாத பிட்ச்களைப் போட்டு நம்மை திசைத்திருப்பி டெஸ்ட் போட்டிகளில் கடுமையான ஸ்பின் பிட்ச்களை போடுவார்கள் என்பதால் பயிற்சி ஆட்டமே தேவையற்ற ஒன்று. அதற்கு பயிற்சி செய்வதே நல்லது என்கிறார் ஸ்மித். ஆகவே வலைப்பயிற்சியில் நாங்கள் சுயமாக ஆடுவதே சிறந்தது என்பதுதான் இந்த முறை ஆஸ்திரேலியாவின் நிலைப்பாடு.

ஸ்மித்தின் இந்தக் கருத்திற்கு இந்திய அணியின் தலையாய ஸ்பின்னர் அஸ்வின் பதில் அளிக்கும் போது, “ஆஸ்திரேலியா இந்த முறை பயிற்சி ஆட்டத்தில் ஆடவில்லை, ஆனால் இது ஒன்றும் புதிதல்ல. நாமும் சில அயல்நாட்டுத் தொடர்களின் போது நெருக்கமான போட்டி அட்டவணை காரணமாக டூர் கேமை தவிர்த்திருக்கிறோம்.

ஸ்மித் நியாயமாகத்தான் சொல்கிறார். ஆம். புனேயில் பெரிய ஸ்பின் பிட்ச்தான். அவர்களுக்கு கிரீன் டாப் பிட்ச் கொடுத்திருக்கலாம்தான். ஆனால் யாரும் இதையெல்லாம் திட்டமிட்டுச் செய்வதில்லை. ஆனால் ஆஸ்திரேலியா அணி வீரர்களைப் பற்றித்தான் நமக்குத் தெரியுமே! தொடருக்கு முன்பு மைண்ட் கேம்கள் விளையாடுவார்கள். ஸ்லெட்ஜ் செய்வார்கள். இப்படிச் செய்வதும், சொல்வதும் அவர்களுக்குப் பிடிக்கும். அது அவர்கள் பாணி கிரிக்கெட்”. இவ்வாறு கூறினார் அஸ்வின்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்