ஆஸி. ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா விலகல்

By செய்திப்பிரிவு

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகா விலகியுள்ளார். ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 16-ம்தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை நவோமி ஒசாகா பங்கேற்கவிருந்தார். ஆனால் திடீரென போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். விலகலுக்கான காரணத்தையும் அவர் அறிவிக்கவில்லை.

நவோமி விலகல் தொடர்பான அறிவிப்பை ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்குழு அதிகாரப்பூர்வமாக நேற்று தெரிவித்துள்ளது.நவோமி ஒசாகாவுக்குப் பதிலாக டயானா யஸ்த்ரேம்ஸ்கா பிரதானச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார் என்றும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக் குழு அறிவிப்புச் செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

27 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

மேலும்