ரொனால்டோ | கோப்புப்படம் 
விளையாட்டு

200 மில்லியன் யூரோ ஒப்பந்தம்: சவுதி அரேபியாவின் Al-Nassr கிளப்பில் ரொனால்டோ இணைந்ததாக தகவல்

செய்திப்பிரிவு

கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவின் Al-Nassr கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 200 மில்லியன் யூரோவுக்கு அவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

சர்வதேச கால்பந்து போட்டிகளில் போர்ச்சுகல் அணிக்காக ரொனால்டோ விளையாடி வருகிறார். அது தவிர கிளப் அளவிலான போட்டிகளிலும் ஸ்போர்ட்டிங் சிபி, மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட், ஜுவான்டஸ் என பல்வேறு அணிகளுக்காக அவர் விளையாடி உள்ளார்.

இந்நிலையில், மான்செஸ்டர் யுனைடெட் அணியுடனான கசப்பான உறவு காரணமாக அவர் வெளியேற்றப்பட்டார். ஒரு பேட்டி ஒன்றில் அணியுடன் தனக்கு இருக்கும் சங்கடங்களை அவர் பகிர்ந்தார். அதன்பின்னர் அணியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

தற்போது அவர் உலகக் கோப்பை தொடரில் பிஸியாக விளையாடி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் விளையாட உள்ள கிளப் அணி குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில்தான் அவர் சவுதி அரேபியாவின் Al-Nassr கிளப்பில் இணைய உள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை ரொனால்டோ உறுதி செய்ய வேண்டி உள்ளது. அவரை அந்த அணி சுமார் 200 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT