எதிர்வரும் 2023 ஆசியக் கோப்பை தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் செல்லாது என நேற்று தெரிவித்திருந்தார் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா. இந்நிலையில், அதனை தனது பாணியில் விமர்சித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷஹித் அஃப்ரிடி.
2023 ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், பிசிசிஐ ஆண்டு பொதுக் கூட்டம் முடிந்ததும் ஜெய் ஷா அதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்திருந்தார்.
“இரு நாடுகளுக்கும் பொதுவாக வேறு ஒரு இடத்தில் 2023 ஆசியக் கோப்பை தொடர் நடக்கலாம். நமது அணி பாகிஸ்தானுக்கு செல்வது அரசின் முடிவு. அதனால் அதில் நாம் எந்த கருத்தும் சொல்ல முடியாது. ஆனால், அடுத்த ஆசியக் கோப்பை தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என முடிவெடுத்துள்ளோம்” என ஜெய் ஷா தெரிவித்திருந்தார். அதை அஃப்ரிடி தனது எதிர்வினையை தெரிவித்துள்ளார்.
“கடந்த 12 மாதங்களாக இரு தரப்பிலும் நட்பு ரீதியிலான உறவு சிறப்பாக மலர்ந்து வருகிறது. அது இரண்டு நாடுகளிலும் ஃபீல்-குட் ஃபேக்டரை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சூழலில் பிசிசிஐ செயலாளர் ஏன் இப்படி சொல்லியுள்ளார்? அதுவும் உலகக் கோப்பை தொடரின் போட்டிக்கு முன்னதாக. கிரிக்கெட் நிர்வாகத்தில் போதிய திறன் இல்லாததை பிரதிபலிக்கிறது” என அஃப்ரிடி விமர்சித்துள்ளார்.