அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற அல்கராஸ் உலகத் தரவரிசையிலும் முதலிடத்தை பிடித்தார்

By செய்திப்பிரிவு

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் 19 வயது வீரரான கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். மேலும் உலகத் தரவரிசையிலும் அவர், முதலிடத்தை பிடித்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்தத் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் 3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 7-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூடை எதிர்த்து விளையாடினார். 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸ் 6-4, 2-6, 7-6(7-1), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

19 வயதான கார்லோஸ் அல்கராஸ் வெல்லும் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

இதன் மூலம் இளம் வயதில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் அல்கராஸ். இதற்கு முன்னர் ரபேல் நடால் கடந்த 2005-ம் ஆண்டு தனது 19 வயதில் பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்றிருந்தார்.

மேலும் அமெரிக்க ஓபனில் பீட் சாம்பிரா ஸுக்கு பின்னர் இளம் வயதில் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் அல்கராஸ். பீட் சாம்பிராஸ் கடந்த 1990-ம் ஆண்டு தனது 19 வயதில் கோப்பையை வென்றிருந்தார். அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற அல்கராஸ், உலகடென்னிஸ் தரவரிசையில் ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதன் மூலம் இளம் வயதில், தரவரிசையில் முதலிடம் பிடித்த வீரர் என்ற சாதனைக்கும் உரியவரானார் அல்கராஸ். ஏடிபி தரவரிசையானது 1973-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் லைடன் ஹெவிட் தனது 20 வயதில் தரவரிசையில் முதலிடம் பிடித்ததே சாதனையாக இருந்தது. இதனை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார் கார்லோஸ் அல்கராஸ்.

2-வது இடம் பிடித்த காஸ்பர் ரூட், தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்