விளையாட்டு

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்

செய்திப்பிரிவு

மும்பை: அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். அந்தத் தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் மட்டுமே அடங்கிய டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான போட்டிகள் வரும் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அந்தத் தொடரை முடித்துக் கொண்டு இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த நிலையில் அயர்லாந்து தொடருக்கான அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

அணி விவரம்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சாஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக்.

இந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வழிநடத்தி, சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தவர். மேலும், ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திரிபாதி அணியில் இடம் பிடித்துள்ளார். சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT