ப்ரீமியர் லீக் | சாம்பியன் பட்டத்தை வென்றது மான்செஸ்டர் சிட்டி

By செய்திப்பிரிவு

மான்செஸ்டர்: 2021-22 ப்ரீமியர் லீக் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது மான்செஸ்டர் சிட்டி கால்பந்தாட்ட கிளப் அணி. கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்த அணி வென்றுள்ள நான்காவது ப்ரீமியர் லீக் பட்டம் இது.

மொத்தம் 20 அணிகள் பங்கேற்று இந்த தொடரில் விளையாடின. ஒவ்வொரு அணியும் தொடரில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகளில் விளையாட வேண்டும். ஒவ்வொரு அணிக்கும் 38 போட்டிகள். அதில் புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பிடிக்கும் அணிகள் சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்படும். இதுவரையில் இந்த தொடரை மான்செஸ்டர் யுனைடெட் அணி அதிகபட்சமாக 13 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. மான்செஸ்டர் சிட்டி அணி ஆறு முறை பட்டம் வென்றுள்ளது.

2011-12, 2013-14, 2017-18, 2018-19, 2020-21 மற்றும் 2021-22 ஆகிய சீசன்களை மான்செஸ்டர் சிட்டி அணி வென்றுள்ளது. நடப்பு சீசனில் 38 போட்டிகளில் விளையாடி 29 வெற்றியை பதிவு செய்துள்ளது மான்செஸ்டர் சிட்டி. 6 போட்டிகள் சமனிலும், 3 போட்டிகளில் தோல்வியையும் தழுவியுள்ளது. மொத்தம் 93 புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. லிவர்பூல் அணி 28 வெற்றிகள் மற்றும் 92 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது. ஆஸ்டன் வில்லா அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது மான்செஸ்டர் சிட்டி.

முகமது சாலா மற்றும் தென் கொரிய வீரர் Son Heung-min தலா 23 கோல்களை பதிவு செய்துள்ளனர். நடப்பு சீசனில் அதிக கோல்களை பதிவு செய்த வீரர்களான இவர்கள் இருவருக்கும் தங்க காலணியை பகிர்ந்து கொண்டனர். கோல்கீப்பர்கள் Alisson மற்றும் Ederson, கோல்டன் கிளவ் வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE