டோக்கியோ ஒலிம்பிக்: ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து

By செய்திப்பிரிவு

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து.

டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறார். அந்த வகையில், இன்று நடந்த காலிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியுடன் மோதினார்.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சிந்து, யமகுச்சியை 21 -13, 22 - 20 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

காலிறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி, அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய சிந்துவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

பி.வி.சிந்து 2016ஆம் ஆண்டு, ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

26 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

34 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

19 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்