ஒலிம்பிக்: வில்வித்தையில் காலிறுதியோடு வெளியேறிய இந்திய ஆடவர் அணி 

By ஏஎன்ஐ


டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தைப் போட்டியில் இந்திய ஆடவர் அணி காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியது.

காலிறுதியில் வலிமைவாய்ந்த தென் கொரிய அணியிடம் 6-0 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி வீழ்ந்தது.

இந்திய ஆடவர் அணியில் பிரவின் ஜாதவ், அதானு தாஸ், தருண்தீப் ராய் ஆகியோர் இடம் பெற்றனர்.

இன்று காலை நடந்த காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் கஜகஸ்தான் அணியை 6-2 என்ற கணக்கில் தோற்கடித்து மிகுந்த நம்பிக்கையுடன் இந்திய ஆடவர் அணி காலிறுதிக்கு முன்னேறியது.

ஆனால், காலிறுதியில் தென் கொரியாவின் கிம் ஜி தியோ, கிம் வூஜின், ஓ ஜின்யெக் ஆகியோரின் துல்லியமான வில்வித்தையின் முன் இந்திய வீரர்கள் தோற்றனர்.

தொடக்கத்திலிருந்தே தென் கொரிய வீரர்கள் இந்திய அணியினருக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். முதல் செட்டில் 10-10-9 என்ற கணக்கில் தென் கொரிய வீரர்கள் இருந்தனர், இந்திய அணியினர் 8-10-10 என்ற கணக்கில் இருந்தனர். ஆனால் 2-வது செட்டில் கொரிய வீரர்கள் 10-10-10 என்ற கணக்கில் 2 புள்ளிகளைப் பெற்றனர்

2-வது செட்டில் இந்திய அணி 9-10-10 என்ற கணக்கில் பதிலடி கொடுத்தனர். ஆனால், அதானுதாஸ் கடைசி நேரத்தில் 8 புள்ளிகள் எடுத்தால் கொரியஅணிக்கு 2 புள்ளிகள் சென்றது. 3-வது செட்டில் இந்திய அணி வீரர்களிடம் நிலைத்தன்மை இல்லாததால், எளிதாக வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை கொரிய வீரர்கள் உறுதி செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்