டாஸ் வென்றது இலங்கை: இந்திய அணியில் 2 வீர்ர்கள் அறிமுகம்: ஆடுகளம் எப்படி?

கொழும்பு நகரில் இன்று நடக்கும் இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணியின் சனகா பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவண் தலைமையில் இந்திய அணி தலா 3 ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதலாவது ஒருநாள் ஆட்டம் கொழும்பு பிரமதேசா அரங்கில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.

விராட் கோலி தலைமையிலான மூத்த வீரர்களைக் கொண்ட இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க இங்கிலாந்து ெசன்றுள்ளது. ஆதலால், இளம் வீரர்களைக் கொண்ட தவண் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் விளையாடுகிறது.

டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சனகா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகிய இரு வீரர்கள் சர்வதேச ஒருநாள் போட்டிக்கு அறிமுகமாகின்றனர். மற்றவகையில் வழக்கமான ஏற்கெனவே சர்வதேச அறிமுகம் உள்ள வீரர்கள்தான் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணி விவரம்:
ஷிகர் தவண்(கேப்டன்), பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, புவனேஷ்வர் குமார், தீபக் சஹர், குல்தீப் யாதவ், யஜுவேந்திர சஹல்
இலங்கை அணி விவரம்:
அவிஷ்கா பெர்னான்டோ, மினோத் பனுகா, பனுகா ராஜகபக்ச, தனஞ்சயா டி சில்வா, சாரித் அசலங்கா, தசுன் சனகா(கேப்டன்), வனிந்து ஹசரங்கா, இசுரு உதானா, லக்சன் சன்டகன், துஷ்மந்தா சமீரா, சமிகா கருணாரத்னே

ஆடுகளம்:
கொழும்பு பிரேமதேசா ஆடுகளத்தைப் பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே ெவற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நடந்த ஆட்டங்களில் பெரும்பலானவற்றில் சேஸிங் செய்யும் அணிதான் அதிகமான தோல்விகளைச் சந்தித்துள்ளது. அதேசமயம், இரவு நேரத்தில் பனிப்பொழிவு, காற்றில் ஈரப்பதம், குளிர்ச்சி ஆகியவை பந்துவீசும் அணிக்கும் பின்னடைவாக அமையலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE