அரசின் அனுமதி இல்லாமல் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடக்காது: ராஜீவ் சுக்லா உறுதி

மத்திய அரசின் அனுமதியின்றி இந்தியா,பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடரில் விளையாடாது என ஐபிஎல் தலைவரும், மூத்த பிசிசிஐ அதிகாரியுமான ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடும் கிரிக்கெட் போட்டி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரிய விருந்தாக இருக்கும். ஆனால் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால், இந்திய அணி பாகிஸ்தானுடன் தனியாக விளையாட மறுத்து வருகிறது. இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயலும் அண்மையில் பேசியிருந்தார்.

இதை ஆதரிக்கும் விதமாக பேசிய சுக்லா, "நான் மத்திய அமைச்சரின் கருத்தை வரவேற்கிறேன். பாகிஸ்தானுடன் நாம்ங்க ஐசிசி தொடர்களில் மட்டும்தான் விளையாடுவோம் என்பது விஜய் கோயலை சந்திக்கும்போது உறுதிபட தெரிந்தது. எனவே அரசின் அனுமதி கிடைக்கும் வரை பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடப்போவதில்லை" எனத் தெரிவித்தார்.

2014 கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தந்தத்தின் படி இந்திய அணி கிரிக்கெட் விளையாடவில்லை என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நஷ்ட ஈடு கோரி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE