அனைத்து கால சிறந்த கேப்டன்: தோனிக்குக் குவியும் புகழாரங்கள்

2015 தொடக்கத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு என்று குண்டைத் தூக்கிப் போட்ட தோனி 2017 தொடக்கத்தில் கேப்டன்சியை துறந்து இன்னொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது முடிவை மதித்தும், வரவேற்றும், அவரது சாதனைகளைப் புகழ்ந்தும் ட்விட்டரில் முன்னாள், இந்நாள் வீரர்கள் பதிவிட்டுள்ளான்ர்

சச்சின் டெண்டுல்கர்: ஒருநாள், டி20 உலகக்கோப்பைகளை வென்ற கேப்டன் தோனிக்கு என் வாழ்த்துக்கள். ஒரு ஆக்ரோஷ வீரர் என்ற நிலையிலிருந்து நிதானமும் உறுதியும் மிக்க ஒரு தலைவராக அவர் உருவெடுத்தது வரை நான் அவரை பார்த்து வருகிறேன். அவரது வெற்றிகரமான கேப்டன்சியை கொண்டாடும் தருணம் இது, அவரது முடிவை மதிக்க வேண்டிய தருணம் இது. களத்தில் அவர் மேலும் நம்மை உற்சாகப்படுத்தப் போகிறார், தோனி சிறப்புற எனது வாழ்த்துகள்.

நரேந்திர மோடி: தோனியின் எதிர்கால இலக்குகளுக்கு எனது வாழ்த்துக்கள். கேப்டனாக இந்திய கிரிக்கெட்டுக்கு செய்த பங்களிப்புகளுக்கு நன்றி. வெல் பிளேய்ட்.

ஹர்திக் பாண்டியா: லட்சக்கணக்கானோருக்கு தோனி நீங்கள் ஒரு உத்வேகம். உங்கள் தலைமையின் கீழ் நான் ஆடிய ஒவ்வொரு கணத்தையும் பெரிய புதையலாகக் கருதுகிறேன்.

சுரேஷ் ரெய்னா: இந்திய அணியின் வெற்றிகரமான தலைவர். தனது தொலைநோக்கை நிஜமாக மாற்றியவர். அனைவரையும் மேலும் கனவு காண உத்வேகமாகத் திகழ்ந்தவர்.

மைக்கேல் வான்: உண்மையில் ஒரு கிரேட்டஸ்ட் கேப்டனே போதுமென்ற மனமே பொன் செய்யும் விருந்து என்று முடிவெடுத்து விட்டார். ஈடு இணையற்ற தலைமைத்துவத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

ரோஹித் சர்மா: உண்மையான வழிகாட்டி, தலைவர், நிறைய வீர்ர்களின் கிரிக்கெட் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தியவர். என்னை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் தொடக்க வீரராக களமிறக்கியதன் மூலம் என்னிலும் தோனி தாக்கம் செலுத்தினார்.

இர்பான் பத்தான்: கேப்டனாக அவரது வழிமுறையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. வெல் டன் மாஹி.

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்: கேப்டன்சியை அடுத்தவருக்கு கொடுக்கும் தருணத்தை அறிந்த ஒரு உண்மையான தலைவரின் அடையாளமே அவரது விலகல். எங்களை உற்சாகப்படுத்தியமைக்கு நன்றி கேப்டன்.

ஹர்ஷா போக்ளே: ஒரு அருமையான சேவகரை எழுந்து நின்று கரகோஷம் செய்து வாழ்த்தும் தருணம். ஆனால் இவர் இந்திய கிரிகெட்டின் ஈடு இணையற்ற தலைவர்.

மொகமது கயீப்: 9 ஆண்டுகளாக வெற்றிகளுடன் தலைமைப்பொறுப்பாற்றிய தோனிக்கு சிரம் தாழ்த்துகிறேன். உங்களை கேப்டனாக அடைய இந்திய அணி பெற்ற பேறு என்னவோ!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE