ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவின் அனைத்து கால சிறந்த உலகக்கோப்பை  அணி: இம்ரான் கான் கேப்டன்

By செய்திப்பிரிவு

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளம் தனது 22 உறுப்பினர்கள் கொண்ட குழுவின் மூலம் அனைத்து காலத்திற்கும் சிறந்த உலகக்கோப்பை அணியைத் தேர்வு செய்துள்ளது.

 

இந்த அணிக்குக் கேப்டன் 1992 உலகக்கோப்பையை பாகிஸ்தான் வெல்ல அணியை கேப்டனாக வழிநடத்திச் சென்ற இம்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் கபில்தேவ், தோனி போன்றோர்களே இல்லை.

 

இதில் ஸ்டீவ் வாஹ், சனத் ஜெயசூரியா, ஸ்டீவ் வாஹ், கபில்தேவ், ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி ஒரு இடத்துக்கு குமார் சங்கக்காரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

அணி விவரம்: ஆடம் கில்கிறிஸ்ட், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், விவ் ரிச்சர்ட்ஸ், குமார் சங்கக்காரா, இம்ரான் கான் (கேப்டன்), லான்ஸ் குளூஸ்னர், வாசிம் அக்ரம், ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன், கிளென் மெக்ரா.

 

ஆடம் கில்கிறிஸ்ட்:

 

31 உலகக்கோப்பை ஆட்டங்கள் 1085 ரன்கள். சராசரி. 36.06, ஸ்ட்ரைக் ரேட் 98. விக்கெட் கீப்பராக 52 அவுட்களுக்கு காரணமாக இருந்தவர்.

 

சச்சின் டெண்டுல்கர்:

 

உலகக்கோப்பைகளில் 45 ஆட்டங்களில் சச்சின் டெண்டுல்கர் 2,278 ரன்கள், சராசரி 56.95.  ஸ்ட்ரைக் ரேட்: 88.98.  6 சதங்கள் 15 அரைசதங்கள்

 

ரிக்கி பாண்டிங்:

 

46 போட்டிகள், 1743 ரன்கள், சராசரி 45.86, ஸ்ட்ரைக் ரேட்: 79.95; 5 சதங்கள் 6 அரைசதங்கள்

 

விவ் ரிச்சர்ட்ஸ்:

 

23 போட்டிகள், 1013 ரன்கள். சராசரி 63.31. ஸ்ட்ரைக் ரேட் 85.05.  சதங்கள் 3, அரைசதங்கள் 5.

 

குமார் சங்கக்காரா:

 

ஆட்டங்கள் 37, ரன்கள்:  1532  சராசரி  56.74  ஸ்ட்ரைக் ரேட் 86.55, 5 சதங்கள், 7 அரைசதங்கள்

 

 

இம்ரான் கான் (கேப்டன்)

 

போட்டிகள் 28, ரன்கள் 666, சராசரி  35.05,  விக்கெட்டுகள் 34, சராசரி 19.26

 

 

லான்ஸ் குளூஸ்னர்:

 

ஆட்டங்கள் 14, ரன்கள் 372  சராசரி 124.00,  விக்கெட்டுகள் 22, சராசரி 22.13

 

வாசிம் அக்ரம்:

 

போட்டிகள் 38, விக்கெட்டுகள்  55, சராசரி 23.83, சிக்கன விகிதம்   4.04.

 

ஷேன் வார்ன்:

 

போட்டிகள் 17,   விக்கெட்டுகள் 32, சராசரி 19.50, சிக்கனவிகிதம் 3.83

 

 

முத்தையா முரளிதரன்:

 

போட்டிகள்  40,  விக்கெட்டுகள்  68, சராசரி 19.63,  சிக்கன விகிதம் 3.88

 

 

கிளென் மெக்ரா:

 

போட்டிகள் 39, விக்கெட்டுகள் 71, சராசரி 18.19, சிக்கன விகிதம்  3.96

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE