சென்னை: கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே உண்டு உறைவிடப்பள்ளியில் சிபிஎஸ்இ தேசிய மகளிர் கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இந்த தொடரில் நாடு முழுவதிலும் இருந்து 9 மண்டலங்களைச் சேர்ந்த 30 பள்ளி அணிகளுடன், துபாய் உள்ளிட்ட 3 வெளிநாடுகளைச் சேர்ந்த அணிகளும் பங்கேற்றுள்ளன.
தொடக்க நாளில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த பிங்குரோவ் பள்ளி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை பிஎஸ் சீனியர் பள்ளி அணியை வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில் டெல்லி மாடர்ன் பரகம்பா பள்ளி, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராணுவ பப்ளிக் பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.
17 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் நெய்வேலி ஜவஹர் மேல்நிலைப் பள்ளி 6-5 என்ற கோல் கணக்கில் துபாயை சேர்ந்த கிரெடென்ஸ் உயர்நிலைப் பள்ளி அணியை வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில் கோவாதி கிங்ஸ் பள்ளி, உத்தரபிரதேசம் ராணுவ பப்ளிக் பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.