விளையாட்டு

கால் இறுதி ஆட்டத்தில் ஆர்எம்கே - எஸ்விசிஇ மோதல்

செய்திப்பிரிவு

சென்னை: பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு கிரிக்கெட் தொடர் கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே கல்லூரி வளாக மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சத்யபாமா பல்கலைக்கழகம் - ஆர்எம்கே கல்லூரி அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சத்யபாமா 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. கிருஷ்ணா 61, திருமால் 51 ரன்கள் விளாசினர்.

173 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆர்எம்கே அணி 19.1 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் சத்யபாமா அணி வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் திருமால், பவிஷ், ஜேக்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் ஆர்எம்கே–ஸ்ரீவெங்கடேஷ்வரா கல்லூரி (எஸ்விசிஇ), விஐடி - எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், லயோலா - சத்யபாமா, ஜேப்பியார் - சவீதா பல்கலைக்கழக அணிகள் மோதுகின்றன.

SCROLL FOR NEXT