SRH vs MI | திமிறிய திலக், கட்டுப்படுத்திய கம்மின்ஸ் -  ஹைதராபாத் 31 ரன்களில் வெற்றி!

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 8-வது லீக் போட்டியில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியை 31 ரன்களில் வீழ்த்தி உள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசன், மார்க்ரம் போன்ற பேட்ஸ்மேன்கள் ஹைதராபாத் அணிக்காக அபாரமாக ஆடி ரன் குவித்தனர். அந்த அணியின் கேப்டன் கம்மின்ஸ் 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது.

அதையடுத்து பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது. இஷான் கிஷன் 13 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் நமன் திர் மற்றும் திலக் வர்மா இணைந்து 84 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நமன் 30 ரன்களிலும், திலக் 64 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

திலக் வர்மாவின் விக்கெட்டை கம்மின்ஸ் கைப்பற்றி இருந்தார். அது ஆட்டத்தில் ஹைதராபாத் அணிக்கு திருப்புமுனை கொடுத்த தருணமாக அமைந்தது. அப்போது 14.1 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்களை மும்பை அணி எடுத்திருந்தது.

அதன் பிறகு மும்பை, ரன் சேர்க்க தடுமாறியது. கேப்டன் ஹர்திக் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். டிம் டேவிட், 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்தார். ரொமாரியோ ஷெப்பர்ட், 6 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது மும்பை. இதன் மூலம் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. மும்பை அணி இந்த சீசனின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.

முன்னதாக, ஹைதராபாத் பேட் செய்த போது அந்த அணிக்காக மயங்க் அகர்வால் - டிராவிஸ் ஹெட் இணை தொடக்கம் கொடுத்தது. தொடக்கத்திலேயே அதிரடி இந்த பார்ட்னர்ஷிப்பை 5-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பிரித்தார். மயங்க் அகர்வால் 11 ரன்களில் அவுட்.

அடுத்து வந்த அபிஷேக் சர்மா, ஹெட்டுடன் கைகோத்தார். 18 பந்துகளில் அரைசதம் கடந்தார் டிராவிஸ் ஹெட். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தவரை ஜெரால்ட் கோட்ஸி விக்கெட்டாக்க, 24 பந்துகளில் 62 ரன்களை குவித்துவிட்டுச் சென்றார் ஹெட்.

அவர் சென்றதும் அணியின் ஸ்கோரை உயர்த்தும் பொறுப்பை ஏற்ற அபிஷேக் சர்மா 7 சிக்சர்கள் அடித்து வான வேடிக்கை காட்டினார். மேலும், 16 பந்துகளில் 50 ரன்களை குவித்தார். அதன் மூலம் ஹைதராபாத் சார்பில் அதிவேக அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் அபிஷேக் சர்மா. மும்பை திணறிக்கொண்டிருந்தது.

ஒருவழியாக பியூஷ் சாவ்லா வீசிய 11-வது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி 63 ரன்களுடன் வெளியேறினார் அபிஷேக் சர்மா. மும்பைக்கு அவரது விக்கெட் பெரும் நிம்மதியாக இருந்தது.

அடுத்து எய்டன் மார்க்ரம் - ஹென்ரிச் கிளாசன் பாட்னர்ஷிப் அமைத்தனர். எல்லா பேட்ஸ்மேனும் அடித்தால் என்ன தான் செய்வது என ரீதியில் மும்பை திணறிக்கொண்டிருக்க ஹென்ரிச் கிளாசன் மட்டும் 7 சிக்சர்ஸ். 18 ஓவர் முடிவில் ஹைதராபாத் 3 விக்கெட் இழப்புக்கு 243 ரன்களைச் சேர்த்தது.

ஹென்ரிச் கிளாசன் 34 பந்துகளில் 80 ரன்களை விளாசி மிரள வைக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் 277 ரன்களை குவித்தது.

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச ஸ்கோர் இதுதான். முன்னதாக கடந்த 2013-ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி 263 ரன்களை எடுத்திருந்ததே ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்நிலையில், அதனை முறியடித்து புதிய சாதனையை படைத்தது ஹைதராபாத்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

9 mins ago

ஓடிடி களம்

15 mins ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

உலகம்

1 hour ago

வர்த்தக உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்