விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் | ஜோகோவிச், வோஸ்னியாக்கி வெற்றி

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் முதல்சுற்றில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றில் நுழைந்துள்ளனர்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்னில் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் 6-2, 6-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் குரோஷியா வீரர் டினோ பிரிஸ்மிக்கை வீழ்த்தி அடுத்த சுற்றில் நுழைந்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி, போலந்து வீராங்கனை மக்டா லினெட்டுடன் மோதினார். இதில் வோஸ்னியாக்கி 6-2, 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது லினெட் பாதியில் விலகினார். இதையடுத்து வோஸ்னியாக்கி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT