“இப்பவே உலகக் கோப்பைய இந்தியா கையில கொடுத்திடலாம்” - ரசிகர்கள் உற்சாகம்!

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை 243 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. இந்த தொடரில் 8 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது இந்தியா. முதல் சுற்றில் நெதர்லாந்து அணியுடன் மட்டும் தான் இந்தியா விளையாட உள்ளது. இந்த சூழலில் இப்போது இந்திய அணியிடம் உலகக் கோப்பையை கொடுத்து விடலாம் என ரசிகர்கள் உற்சாகமாக சொல்லி வருகின்றனர்.

“இந்திய அணி வெற்றி நடையை நிறுத்தப் போவதில்லை. அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறது. நம் அணியின் பயிற்சியாளர், பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் என அனைவரும் கடினமாக ஆடி வருகின்றனர்” என்றார் ரசிகர் ஒருவர்.

“கோலி 49-வது சதத்தை பதிவு செய்வார் என எதிர்பார்த்து நாங்கள் சென்னையில் இருந்து இந்தப் போட்டியை பார்க்க வந்தோம். அவர் எங்களை ஏமாற்றவில்லை. இது அபாரமான வெற்றி” என்றார் ஒரு ரசிகர்.

“இது இந்தியாவுக்கு பெருமையான தருணம். கிரிக்கெட்டுக்கும், விளையாட்டுக்கும் பெருமையான தருணம். இந்தியா மகத்தானது என்பதை உலகம் முழுவதும் உணர்ந்துள்ளது” என மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் தெரிவித்தார்.

“இந்தியா இப்படி விளையாடி நாங்கள் பார்த்ததே இல்லை. இது உலகக் கோப்பை போட்டி போல இல்லை. ஏதோ ஒரு கிளப் அளவிலான போட்டி போல தான் இருந்தது. இந்தப் போட்டியை மிகவும் ரசித்து பார்த்தோம்” என ரசிகர் ஒருவர் தெரிவித்தார்.

“இந்தப் போட்டிக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க வலுவான அணி என சொல்லப்பட்டது. ஆனால், இந்திய அணி யார் வலுவானவர்கள் என்பதை காட்டியுள்ளது. விராட் கோலி பிறந்தநாள் ட்ரீட் கொடுத்துள்ளார். இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என நாங்கள் நம்புகிறோம்” என இந்திய அணியின் ரசிகர் ராம்பாபு தெரிவித்தார்.

“தொடக்கம் முதலே இந்தியா வெல்லும் என்பதை நாங்கள் அறிவோம். உலகக் கோப்பையை இந்தியா தான் வெல்லும்” என பாஜகவை சேர்ந்த பிரியங்கா தெரிவித்தார்.

“நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இந்தியா மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. உலகக் கோப்பை இறுதியை நோக்கி நகர்கிறது. ஜடேஜா அபாரமாக செயல்பட்டார். இன்றைய போட்டியில் மாயம் செய்தார். 5 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இந்தியாவின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. ஆல்-ரவுண்ட் பர்ஃபாமென்ஸ் கோர்த்துள்ளார். உலகக் கோப்பை நமக்கு தான் என்ற உணர்வு எழுகிறது” என ஜடேஜாவின் சகோதரி நைனா ஜடேஜா தெரிவித்தார்.

“இன்றைய தினம் எனக்கு டபுள் கொண்டாட்டம். எனக்கு திருமணம் மற்றும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முக்கியமாக சச்சினின் சத சாதனையை சமன் செய்துள்ளார் கோலி. இந்த நாளை மறக்க முடியாது. அற்புதமாக உணர்கிறேன்” என உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் நகரை சேர்ந்த மணப்பெண் தெரிவித்துள்ளார்.

இப்படி நாடு முழுவதும் ரசிகர்கள் இந்தியாவின் வெற்றியை கொண்டாடினர். ‘இந்தியா - ஆஸ்திரேலியா இடையில் தான் இறுதிப் போட்டி’, ‘இப்பவே உலகக் கோப்பையை இந்தியா கையில கொடுத்திடலாம்’ என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 secs ago

க்ரைம்

6 mins ago

கல்வி

3 mins ago

உலகம்

14 mins ago

இணைப்பிதழ்கள்

28 mins ago

க்ரைம்

33 mins ago

க்ரைம்

40 mins ago

உலகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வெற்றிக் கொடி

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்