உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சி: தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுடன் இந்தியா மோதுகிறது

By செய்திப்பிரிவு

பெங்களூரு: ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியில் இந்திய அணி அடுத்த இரு வருடங்களில் மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் மோத உள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியில் இந்திய அணி தனது பயணத்தை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தொடங்குகிறது. அடுத்த மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் ஜூலை 12 முதல் 16-ம் தேதி வரையும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் ஜூலை 20 முதல் 24-ம் தேதி வரையும் நடைபெறுகிறது.

இதன் பின்னர் வரும் டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி அங்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. 2024-ம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதே ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் வங்கதேச அணியும் இந்தியாவுக்கு வந்து டெஸ்ட் தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது.

இந்த தொடர் முடிவடைந்ததுமே நியூஸிலாந்து அணி இந்திய மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. இந்த தொடர் அக்டோபர் மாத இறுதியில் தொடங்கி நவம்பரில் முடிவடையும். இந்த இரு தொடர்களையும் முடித்துக்கொண்டு இந்திய அணி பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா புறப்பட்டுச் செல்லும். இந்த தொடர் 2024-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கி 2025-ம் ஆண்டு ஜனவரியில் முடிவடையும். ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியில் இந்திய அணியின் கடைசி டெஸ்ட் தொடராக ஆஸ்திரேலிய பயணம் அமையும். முந்தைய பதிப்புகளில் கடைபிடிக்கப்பட்டது போன்றே புள்ளிகள் கணக்கிடப்படும். அந்த வகையில் வெற்றி பெற்றால் 12 புள்ளிகள் வழங்கப்படும். போட்டி‘டை’யில் முடிவடைந்தால் 6 புள்ளிகள் கிடைக்கும். அதேவேளையில் போட்டி டிராவில் முடிந்தால் 4 புள்ளிகள் வழங்கப்படும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் இரு பதிப்புகளிலும் இந்திய அணி 2-வது இடத்தை பிடித்திருந்தது. 2021-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் நியூஸிலாந்திடம் இந்திய அணி தோல்வி கண்டிருந்தது. அதேவேளையில் கடந்த வாரம் முடிவடைந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி பறிகொடுத்திருந்தது. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்