சபரிமலையில் மகர ஜோதியாக காட்சியளித்த ஐயப்பன் - 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்

By செய்திப்பிரிவு

பத்தனம்திட்டா: சபரிமலை பொன்னம்பல மேட்டில் நேற்று மகர ஜோதியாக காட்சியளித்த ஐயப்பனை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசித்தனர்.

கடந்த 3 ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.

நாள்தோறும் ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. இந்நிலையில், மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் மகர விளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசன நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றன. பாதுகாப்புப் பணிகளுக்காக கோயில் வளாகத்திலும், பம்பையிலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

நேற்று மாலை 6.30 மணியளவில் பந்தள அரண்மனையில் இருந்து ஆபரண பெட்டியில் கொண்டு வரப்பட்ட தங்க ஆபரணங்கள் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை 6.45 மணியளவில் சபரிமலை பொன்னம்பல மேட்டில் சுவாமி ஐயப்பன் பேரொளியாக மகர ஜோதி வடிவத்தில் பக்தர்களுக்கு 3 முறை காட்சியளித்தார். அப்போது ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி ஐயப்பனை மகர ஜோதி வடிவில் கண்டு தரிசித்தனர்.

கோயில் வளாகம் பம்பையில் மட்டும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். சபரிமலையின் சுற்று வட்டார பகுதியிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மகர ஜோதியை கண்டு தரிசித்ததாக சபரிமலை தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலை சன்னிதான வளாகம், கோயிலுக்குச் செல்லும் வழி, பம்பை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினரும் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

இரவு 8.45 மணிக்கு ஐயப்பன் கோயிலில் மகாசம்ஸ்கிரம பூஜை நடத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்