திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று கார்த்திகை தீப திருவிழா

By செய்திப்பிரிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது.

இவ்விழாவையொட்டி இன்றுகோயில் வளாகத்தில் உள்ள தங்ககொடி மரத்திலும், பலி பீடத்திலும் மாலை 5 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. இதனை விஷ்ணு கார்த்திகை என்று அழைக்கின்றனர். இரவு 8 மணி வரை தீபம் ஏற்றி வழிபட இருப்பதால், கோயிலில் இன்று மாலை நடைபெற உள்ள சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், பவுர்ணமியையொட்டி நாளை (8-ம் தேதி)இரவு திருமலையில் கருட சேவை நடைபெற உள்ளது. இதையொட்டி, நாளை இரவு 7 மணி முதல் 9 மணி வரை மாட வீதிகளில் மலையப்பர் உலா வந்து அருள் பாலிக்க உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

58 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

42 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

20 mins ago

மேலும்