ஏழுமலையானை தரிசிக்க இன்று ஆன்லைனில் டிக்கெட் - பிரம்மோற்சவ நாளில் சர்வதரிசனம் மட்டும்

By என்.மகேஷ்குமார்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை வரும் அக்டோபர் மாதம் தரிசனம் செய்யவுள்ள பக்தர்கள், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை இன்று 18-ம் தேதி ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்துகொள்ளலாம்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அலைமோதும் நிலையில், வரும் அக்டோபர் மாதம் சுவாமியை ரூ.300 சிறப்பு தரிசன கட்டணம் மூலம் (SED) தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட்டுகளை இன்று 18-ம் தேதி காலை 9 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது. தினமும் 30 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் அக்டோபர் மாதம் 6-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை வெளியிடப்பட உள்ளன.

இதனை tirupatibalaji.ap.gov.in என்கிற தேவஸ்தான இணைய தளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். ஆனால், செப்டம்பர் மாதம் 27-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை திருமலையில் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதால், பிரம்மோற்சவ நாட்களில் வெறும் சர்வ தரிசனத்தை மட்டுமே அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதால், அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை பக்தர்கள் ரூ. 300 டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாது. இதனை கவனத்தில் கொண்டு பக்தர்கள் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்