வார ராசி பலன் | 03-04-14 முதல் 09-04-14 வரை - (துலாம் முதல் மீனம் வரை)

By சந்திர சேகர பாரதி

துலாம்

சூரியன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு உதவுவார்கள். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு கூடும். மக்களால் திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். வாரப் பின்பகுதியில் தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும்.

தொழிலில் அபிவிருத்தி காணலாம். புதிய பதவி, பட்டங்கள் தேடிவரும். பொருளாதார நிலை உயரும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். கடல் சார்ந்த பொருட்கள், வெண்மை பொருட்கள், ஜலப்பொருட்களால் ஆதாயம் அதிகம் கிடைக்கும். எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் புகழ்பெறுவார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 5, 9, திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு,

வடகிழக்கு, நிறங்கள்: இளநீலம், வெண்மை, பச்சை, பொன் நிறம், ஆரஞ்சு, எண்கள்: 1, 3, 5, 6,

பரிகாரம்: ராகு, கேது, சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. பிறரிடம் கோபப்படாமல் சுமுகமாகப் பேசிப் பழகவும்.



விருச்சிகம்

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ஆமிடத்திலும் சுக்கிரன் 4-லும், கேது 6-லும் உலவுவது சிறப்பாகும். சனி 12ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். எதிரிகள் அடங்கிப்போவார்கள். எடுத்த காரியங்களை எப்பாடுபட்டாவது நிறைவேற்றி வருவீர்கள். இன்ஜினீயர்களுக்கு வரவேற்பு கூடும். செந்நிறப்பொருட்கள் லாபம் தரும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். கணவன் மனைவியிடையே அந்நியோன்யம் உண்டாகும்.

புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். சூரியனும் புதனும் 5-லும், குரு 8-லும் இருப்பதால் மக்கள் நலனில் அக்கறை தேவை. மறதியால் அவதி ஏற்படும். வாரக் கடைசியில் தொலைதூரத் தொடர்பு பயன்படும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். எதிர்பாராத பொருள் சேரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 5, 9, திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு,

நிறங்கள்: இளநீலம், வெண்மை, மெரூன், சிவப்பு, எண்கள்: 6, 7, 9,

பரிகாரம்: குருப் பிரீதி செய்யவும். துர்கா கவசம் பாராயணம் செய்வது நல்லது. வேதம் படிப்பவர்களுக்கும் படித்தவர்களுக்கும் அந்தணர்களுக்கும் உதவி செய்யவும்.



தனுசு

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 4-ல் புதனும் 7-ல் குருவும் 10-ல் செவ்வாயும், 11-ல் சனி, ராகு ஆகியோரும் உலவுவதால் வெற்றிவாய்ப்புக்கள் கூடும். எதிரிகள் அடங்கிப் போவார் கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். நல்லவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். நண்பர்கள், உறவினர்களது வருகை மனத்துக்குத் தெம்பூட்டும்.

புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் நலம் புரிவார்கள். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். கணவன் மனைவி உறவு நிலை திருப்திகரமாக இருந்துவரும். பெற்றோரால் நலம் உண்டாகும். மக்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும் என்றாலும் சமாளிப்பீர்கள். அலைச்சல் கூடும் என்றாலும் அதனால் பயனும் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதி: ஏப்ரல் 5, திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தென்மேற்கு, மேற்கு, வடகிழக்கு,

நிறங்கள்: நீலம், சிவப்பு, பொன் நிறம், எண்கள்: 3, 4, 5, 6, 8, 9,

பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்வது நல்லது.



மகரம்

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 3-ல் சூரியனும் 10-ல் ராகுவும் உலவுவதால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பணவரவு கூடும். பேச்சில் இனிமை தவழும். அரசியல்வாதிகளுக்குச் செல்வாக்கும் மதிப்பும் உயரும். நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்திகரமாக இருந்துவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும்.

பெண்களுக்கு மன உற்சாகம் கூடும். கலைஞர்களுக்குப் பொருளுடன் புகழும் கிடைக்கும். 3-ல் புதனும் 4-ல் கேதுவும் 6-ல் குருவும் இருப்பதால் வியாபாரத்தில் முழுக்கவனம் தேவை. தாய் நலனிலும் மக்கள் நலனிலும் கவனம் செலுத்த வேண்டிவரும். 9-ல் வக்கிர செவ்வாயும் 9-ல் வக்கிர சனியும் ராகுவும் உலவுவதால் தொழிலில் அலட்சியப் போக்குக்கு இடம்தரக் கூடாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 5, 9, திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு, கிழக்கு,

நிறங்கள்: இளநீலம், வெண்மை, கறுப்பு, ஆரஞ்சு, எண்கள்: 1, 4, 6,

பரிகாரம்: விநாயகரையும் சுப்பிரமணியரையும் வழிபடவும். குடும்பப் பெரியவர்களையும் குரு ஸ்தானத்தில் உள்ளவர்களையும் வணங்கி அவர்களது வாழ்த்துக்களைப் பெறவும்.



கும்பம்

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 2-ல் புதனும், 3-ல் கேதுவும், 5-ல் குருவும் உலவுவதால் மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். மாணவர்களுக்கு வெற்றிகள் குவியும். எதிர்ப்புக்கள் விலகும்.

பண நடமாட்டம் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு நிலை திருப்திகரமாக இருந்துவரும். 8-ல் வக்கிர செவ்வாயும், 9-ல் வக்கிர சனியும், ராகுவும் உலவுவதால் இயந்திரப் பணிகளில் ஈடுபடும்போதும் விளையாட்டுகளில் பங்கேற்கும் போதும் பாதுகாப்புத் தேவை. சகோதர நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 5, 9, திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடக்கு,

நிறங்கள்: மெரூன், பொன் நிறம், இளநீலம், வெண்மை, எண்கள்: 3, 5, 6, 7.

பரிகாரம்: செவ்வாய், சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது அவசியமாகும். முருகனுக்கும் ஆஞ்சநேயருக்கும் அர்ச்சனை செய்வது நல்லது.



மீனம்

உங்கள் ராசிக்கு 12-ல் சுக்கிரன் உலவுவது மட்டுமே சிறப்பாக உள்ளது. இதர கிரக நிலை திருப்திகரமாக இல்லாததால் எதிலும் விசேடமான நன்மைகளை எதிர்பார்க்க இயலாது. பேச்சிலும் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு தேவை. வீண்விவகாரங்களில் தலையிட வேண்டாம். உடல்நலனில் கவனம் தேவைப்படும். வாழ்க்கைத்துணை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.

கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் அளவோடு நலம் உண்டாகும். ஜனன கால ஜாதகப்படி தற்சமயம் யோகபலம் உள்ள தசை, புக்திகள் நடைபெறுமானால் நற்பலன்கள் உண்டாகும். ஜாதக பலமும் இல்லாதவர்கள் இறைவழிபாட்டிலும் கிரக வழிபாட்டிலும் முழு நம்பிக்கையுடன் ஈடுபட்டால் சங்கடங்கள் குறையவும், மன அமைதி பெறவும் வாய்ப்பு உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 5, 9, திசை: தென்கிழக்கு, நிறங்கள்: இளநீலம், வெண்மை, எண்: 6,

பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிக்கவும். நவக்கிரகங்களுக்குரிய ஸ்லோகங்களையும் காயத்ரியையும் சொல்லி வழிபடவும். வீட்டில் கணபதி, துர்கா, நவக்கிரக ஹோமம் செய்வது நல்லது. அல்லது ஹோமம் நடக்குமிடம் சென்று கலந்துகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

57 mins ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்