ஜோதிடம் என்பது அறிவியலா?- 10: பரிகாரங்கள் எதற்காக?

By மணிகண்டன் பாரதிதாசன்

கிரக தோசம் (கிரக தோஷம்)

பரிகாரம் என்றால் என்ன என்று அறிவதற்கு முன், தோசம் பற்றி அறிந்து கொள்வோம். பெரும்பாலும் ஜோதிடத்தில் சம்ஸ்கிருத வார்த்தைகளே பயன்படுத்தபடுகிறது. தோசம் (அ) தோசா என்ற சொல் கூட சமஸ்கிருத பின்னணி கொண்டது தான். தோசம் என்றால் குறைபாடு அல்லது ஒவ்வாமை என்று பொருள்.

கிரக தோசம் என்றால் அந்த கிரகத்தின் பண்புகள் (காரகத்துவம்) குறைவாகவோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ கிடைப்பது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப, அளவுக்கு அதிகமாக கிடைக்கும் அசுப மற்றும் சுப கிரக பண்புகள் எதோ ஒருவிதத்தில் மனித உடலை அல்லது மனதை பாதிக்கிறது.

பரிகாரம் பற்றிய விளக்கம்

பரிகாரம் என்பதை பரி + காரம் என்று பிரித்து பொருள் காணவேண்டும். ஏற்கெனவே சொல்லியது போல் பரிகாரம் என்பது சமஸ்கிருத வார்த்தையே. பரி - இணையான, காரம் அல்லது காரகம் - செயல் அல்லது வினை. இதன் முழு பொருள் இணையான செயல். பரிகாரம் என்பது பொய் என்ற சிலரின் கூற்றை உடைக்கவே இந்த கட்டுரை.

கிரக பண்புகளால் பாதிக்கப்படும் மனிதனின் உடலை பாதுகாக்கவே இந்த பரிகாரங்கள். பரிகாரம் என்பதன் சரியான அர்த்தம் இணையான செயல் இதனை மாற்று செயல் என்றும் கூறலாம். ஒரு வினையை சமன்படுத்தும் அதற்கு எதிரான இன்னொரு வினை அல்லது செயல். இதுவே பரிகாரம் என்பதன் எளிய அர்த்தம்.

கிரகங்கள் மிகப் பெரியவை அவற்றின் இயக்கத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பது நிதர்சன உண்மை. ஆனால் அவற்றின் பண்புகள் பூமியில் பிரதிபலிக்கும், அந்த பிரதிபலிப்பால் உண்டாகும் பாதிப்புகளை போக்க அதற்கு இணையான செயல்களால் செய்து மாற்றலாம்.

உதாரணமாக, சூரியனின் அதிக வெப்பத்தில் இருந்து கண் கூசுவதை தவர்க்க கூலிங் கிளாஸ் அணிவது கூட ஒருவித பரிகாரமே. அது போலவே கிட்ட பார்வை அல்லது தூர பார்வை போன்ற பார்வை குறைபாடுகளை போக்க கண் கண்ணாடி அணிந்து கொள்வதும் ஒருவகை பரிகாரமே.

பழங்காலத்தில் பெரும்பாலும் கிரகங்களால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளுக்கும் மூலிகைகள் மற்றும் பல உடற்பயிற்சிகள் மற்றும் தியான முறைகளும் கற்று தரப்பட்டது. மேலும் இத்தகு பரிகாரங்களை சரியாக செய்ய முன்னோர்கள் அதனை ஆன்மீகத்துடன் இணைத்தனர். ஆன்மீகத்துடன் இணைக்கப்பட்ட எந்த ஒரு கலையும் உலகம் உள்ளவரை அழியாமல் பின்பற்றபடும் என்பது முன்னோர்கள் எண்ணம் . இதற்கு ஒரு சரியான உதாரணம் தான் தோப்பு கரணமும் தலையில் குட்டிக் கொள்ளும் செயல்கள்களும். இவை மனிதனின் மூளையைத் தூண்டி, அறிவுத் தேடலை அதிகரிப்பதால், அதனை ஞான காரகன் என்று அழைக்கப்படும் கேதுவின் அதிபதியான விநாயகருடன் இணைத்து, இன்று வரை அது பின்பற்றபடுகிறது.

சந்திரன் சுக்கிரன் சேர்க்கை பெற்ற பெண்களை எளிதில் வசியம் செய்ய முடியும் என்று அறிந்த முன்னோர்கள், நெற்றியில் பெண்கள் குங்குமம் வைக்கும் பழக்கம் ஏற்படுத்தி, பெண்களை வசியம் செய்வதில் இருந்து காத்தனர். சிவப்பு நிறம் என்பது அதிக அலைநீளம் கொண்டது என்பதால், வசியம் செய்வது கடினம். இதுவும் ஒருவகை பரிகாரமே.

உண்மையில் பரிகாரங்கள் மனிதனின் உடலில் பல மாற்றங்கள் அல்லது செயல்கள் செய்து கிரக காரக பாதிப்புக்களைச் சரி செய்கிறது.

எனவே பரிகாரங்கள் என்பது உண்மையே ஆனால் கிரக பண்புகளால் ஏற்படும் பாதிப்பை சரியாக ஆராய்ந்து அதற்கு இணையான செயல்கள் செய்தால், பரிகாரங்கள் பலிப்பதை உணரலாம். கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து அதற்குரிய சில விரல் முத்திரை பயிற்சிகளைக் கூட வகுத்தனர்.

செம்பு உலோகத்தால் செய்யப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் உடலில் செவ்வாய் பாதிப்புகள் குறைகிறது என்பதைக் கண்டறிந்து, அதை வாழ்க்கையின் நடைமுறையாக்கி வைத்தனர் நம் முன்னோர்கள்.

அன்று ஆன்மீகத்துடன் இணைக்கப்பட்ட பரிகாரங்கள், காலபோக்கில் ஆன்மீகத்தை மட்டுமே கடைப்பிடித்து, அதனுடன் இணைக்கப்பட்ட பரிகாரங்களை தவிர்த்தனர். இதனால் முழுமையான பரிகாரம் என்பது இக்காலத்தில் பின்பற்றப்படவில்லை.

எந்த கிரகம் நம் உடலை பாதிக்கிறது என்பதை அறிந்து, அல்லது நன்மை செய்யும் கிரகத்தை எந்த கிரகம் பாதிக்கிறது - அதன் மூலம் எந்த உடல் பகுதி பாதிக்கிறது என்பதை அறிந்து அதற்குரிய வழிமுறைகளை மேற்கொண்டால் அதுவே சரியான பரிகாரம். மேலும் பாதிக்கும் கிரகத்தின் அதிபதியை வணங்கி, அந்த பரிகாரத்தை அந்த அதிபதியுடன் இணைத்து நிறைவேற்ற, மன நிறைவுடன் முழு நம்பிக்கையும் மனதில் அதிகரிக்கும்.

(மேலும் அறிவோம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

11 days ago

ஆன்மிகம்

17 days ago

ஆன்மிகம்

19 days ago

ஆன்மிகம்

19 days ago

ஆன்மிகம்

19 days ago

ஆன்மிகம்

19 days ago

ஆன்மிகம்

21 days ago

ஆன்மிகம்

24 days ago

ஆன்மிகம்

25 days ago

ஆன்மிகம்

25 days ago

மேலும்