தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவம்பர் 2-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை கந்த சஷ்டி திருவிழா நடைபெறுகிறது. நவம்பர் 7-ம் தேதி சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
கந்த சஷ்டி திருவிழா நாட்களில் கடந்த ஆண்டைப்போல இந்தஆண்டும் ரூ.1,000 விரைவு தரிசனக்கட்டணச் சீட்டு முறையை அமல்படுத்த முடிவு செய்திருப்பதாகவும், இது தொடர்பாக பொதுமக்கள்அக். 3-ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்குமாறும் கோயில் நிர்வாகம்அறிவித்துள்ளதாக தகவல் வெளியானது. இது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கோயில் தக்கார் அருள்முருகன் கூறும்போது, “கந்த சஷ்டி திருவிழாவின்போது ரூ.1,000 விரைவு தரிசனக் கட்டணச் சீட்டு முறையை அமல்படுத்துவது தொடர்பாக கோயில் நிர்வாகத்தால் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அப்படி எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை” என்றார்.