கோப்புப் படம் 
ஆன்மிகம்

கும்பகோணத்தில் நாளை மாசி மக தீர்த்தவாரி

செய்திப்பிரிவு

கும்பகோணம்: மாசி மக விழாவையொட்டி கும்பகோணத்தில் சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காசிவிஸ்வநாதர் கோயில்களின் தேரோட்டம் இன்று (பிப். 23) நடைபெறுகிறது.

தொடர்ந்து, மகாமக குளத்தில் நாளை தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி, காசி விஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய10 சிவன் கோயில்களில் இருந்து சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகள் மகாமக குளக்கரையில் எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டருளுவார்கள். மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு, மகாமக குளத்தில் புனித நீராடுவர்.

SCROLL FOR NEXT