சமையலறை

வீடெல்லாம் மணக்கும் ஓணம்: பாலடைப் போளி

ப்ரதிமா

என்னென்ன தேவை?

பாலடை – ஒரு கப்

நெய் – தேவைக்கு

துருவிய வெல்லம் - ஒரு கப்

தேங்காய்த் துருவல் - அரை கப்

ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை

மைதா – ஒரு கப்

லெமன் ஃபுட் கலர் – சிறிது

கடலைப் பருப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

கடலைப் பருப்பை வேகவைத்து மசித்துக் கொள்ளுங்கள். பாலடையை நெய்யில் வறுத்து, தண்ணீர் ஊற்றி வேகவைத்துக்கொள்ளுங்கள். மைதாவுடன் ஃபுட் கலர் சேர்த்துத் தண்ணீர் தெளித்துச் சற்றுத் தளர்வாகப் பிசைந்துகொள்ளுங்கள். இதை அரை மணி நேரம் ஊறவையுங்கள்.

அடி கனமான வாணலியில் வெல்லத் துருவல், தேங்காய்த் துருவல் சேர்த்து சிறிது நீர் விட்டுக் கொதிக்கவிடுங்கள். வேகவைத்த கடலைப் பருப்பு, பாலடை சேர்த்துக் கிளறுங்கள். ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கலவை கெட்டிபட்டதும் அடுப்பை அணைத்துவிட்டால் பாலடை பூரணம் தயார்.

பிசைந்துவைத்திருக்கும் மேல் மாவில் சிறு உருண்டை எடுத்து வாழையிலையில் வைத்துத் தட்டுங்கள். நடுவில் பாலடை பூரணத்தை வைத்து மூடி, வட்டமாகத் தட்டுங்கள். இவற்றைச் சூடான தோசைக் கல்லில் போட்டுச் சுற்றிலும் சிறிது எண்ணெய் விடுங்கள். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுங்கள். போளியின் மேல் முந்திரி, பாதாம் தூவி அலங்கரிக்கலாம்.

SCROLL FOR NEXT