சமையலறை

பேல் பகோடா

ப்ரதிமா

என்னென்ன தேவை?

தூள் பகோடா – 100 கிராம்

வறுத்த பொரி – ஒரு கப்

வறுத்த நிலக்கடலை – கால் கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம், வெள்ளரி, தக்காளி, கேரட், கொத்த மல்லித் தழை, புதினா, மாங்காய்த் துண்டுகள் - தலா 2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சைச் சாறு – சில துளிகள்

பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

வேகவைத்த உருளைக் கிழங்கு - 2

எப்படிச் செய்வது?

பொடியாக நறுக்கிய காய்கள், உருளைக் கிழங்கு, உப்பு, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள். அவற்றுடன் சிறிதளவு எண்ணெயில் வறுத்த பொரி, பக்கோடா, வறுத்த நிலக்கடலையைச் சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள். பகோடா இருப்பதால் மிக்சர் சேர்க்கத் தேவையில்லை.

SCROLL FOR NEXT